வேற வழி தெரியல

என் சொந்த ஊர் ராம்நாடு, ஊருல வேலையில்லாம லட்சம் பேருல நானும் பிழைப்புகாக மேற்குதேசம் வேலைக்கு வந்த டிப்லோமா முடிச்சிருக்க, இங்கதான் பெரிய கம்பெனி லேபர் கேம்ப் ல அசிஸ்டன்ட் வேலை பார்க்கிறேன், இங்க வேலை செய்ரவங்களுக்கு எதேனும் காயம், உடல்வலி, காய்ச்சல் இருந்தால் மருத்துவமணை அழைச்சிட்டு போய் டாக்டர் காமிக்கனும். அப்படிதான் வேலைக்கு சேர்ந்து ஒருவரை சந்திந்தேன், அவரை பற்றிதான் உங்களிடம் சொல்லனும் இதை எழுதுற! 

அவர் பெயர் ரத்தினம். பெயரை கேட்டதும் ஏதோ அவரை பிடித்துவிட்டது! என்ன உதவியானாலும் நான் செய்வேன், அவருக்கு 55 வயது இருக்கும்.! அப்பா மாதிரி தான் அவரை நான் பார்த்தேன், அவரோட அனுபவம் என்னோட வயசு, சின்ன வயசுல வெளிநாடு வந்துட்டாரு., வீட்ல வேலை, ஹோட்டல் வேலை, பிரிண்டர் கம்பெனி பேனர் ஒட்றதுனு கடைசியா இந்த கட்டுமான கம்பெனியில் வேலை.

ரத்தினம் அப்பாவுக்கு உடல்வலி, அவருக்கு இனிப்பு நீர் நெஞ்சுலி பிரச்சனையும் இருப்பதால். நான் தான் ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போவேன், அப்போ தான் அவரோட நல்லா பேசி பழக்கம், அவர நான் அப்பா தான் கூப்பிடுவ! நான் பலமுறை சொல்லிருக்க உடலுக்கு முடிலனா ஊருக்கு போகலாம் னு,

இல்ல தம்பி, வீட்டில வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்காங்க கட்டி கொடுக்கனும், கடன் இருக்கு சொல்லி முடிச்சுருவாறு! 

கடந்த மார்ச் 2020 கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதும் பரவ! நாடு முழுக்க ஊரடங்கு. என் கம்பெனியும் முடிட்டாங்க இரண்டு மாதம் சம்பளம் இல்லை, நாங்களாம் கம்பெனி ரூம் தங்கியிருந்தோம், முதல் மாசமாவது முணு வேலை உணவு வந்துச்சி பிறகு கம்பெனி சரியான வேலை இல்லாதனால அதையும் நிறுத்திட்டாங்க! ஊருக்கு பணம் அனுப்ப முடியாம, சாப்பிட வழியில்லாம தான் கஷ்டப்பட்டோம். கம்பெனி சொல்லிட்டாங்க 30% வேலையாட்கள் வேலையிலிருந்து நிறுத்த போறாங்கனு.! அதுல அப்பா ரத்தினம் பெயரும் இருந்துச்சி, அன்னைக்கு ராத்திரி என் ரூம் ல தான் இருந்தாங்க, ரொம்ப கவலைப்பட்டாங்க, எப்படி என் பிள்ளைகளை கட்டி கொடுக்கபோறேன், அவர் அழுது அன்னைக்கு தான் பார்த்தேன், கஷ்டம் தான் என்னிடமும் பணமில்லை, 

என்னிடமிருந்த பணம், என் கம்பெனி முன்தொகை பணம் எடுத்து கொடுத்தேன், ரத்தினம் அப்பா, ஊருக்கு போய் 6 மாசம் இருக்கும்! வீட்டு விலாசம் மட்டும் தான் என்னிடம் இருந்தது, எனக்கு கம்பெனி வருட லீவு ஒரு மாதத்திற்கு ஊருக்கு வந்தேன். அப்படியே ரத்தினம் அப்பாவை பார்க்க வீட்டை கண்டுபிடிச்சி அங்கே அம்மாவும் ஒர் தங்கச்சியும் இருந்தாங்க. ரத்தினம் அப்பா தவறிட்டார்னு தங்கச்சி சொன்னதும் பேச ஒன்னுமில்லை, அப்பா நீங்க வந்தா ஒரு லட்டர் கொடுக்க சொன்னாங்கனு அலமாரி இருந்து எடுத்து என்னிடம் லட்டர் கொடுத்தாங்க..

அன்புள்ள தம்பி, என்னை பார்க்க வருவனு தெரியும், நன்றி உன்னை பற்றி வீட்ல சொல்லிருக்க எனக்கு செய்த உதவிய, பெரிய பொண்ணு நான் இங்கே வந்ததும் கல்யாணம் செய்து கொடுத்துட்ட அடுத்த ஊர்ல தான் மருமகன் வீடு, சின்ன பொண்ணு இருக்கா அவளையும் கட்டிக்கொடுக்கனும், நெஞ்சுவலி டாக்டர்ட்ட போகனும் பணமில்லை, வீட்ல யாருக்கும் தெரியாது அப்போ அப்போ வலி வரும்! உன்னிடம் வாங்குன பணம் இதுல வச்சிருக்க! நீ அப்பா சானத்தில் என்னிடம் கொடுத்தாலும் நான் வாங்குன கடன் கொடுக்கனும்! நீ எப்ப வேண்டாலும் என் வீட்டுக்கு வரலாம்! நான் இல்லனாலும் !

நல்ல மனுசன் ! இறப்பும் பிரிவும் வரும் அத தாக்க கூடிய சக்தி தான் வேணும்.! அவர் வீட்டிலிருந்து விடைப்பெற்றேன்..