கனவு தேவதை

ஞாயிறுகாலை 7மணி எப்பவும் போல பல்தேய்துக்கொண்டேகண்ணாடிபார்த்தேன். தீடிர்மாற்றம் பயந்துவிட்டேன். ஆம்கண்ணாடியில் நான் பெண்ணாகமாறியது போல் தோற்றம். எனக்குஎன்ன செய்வது என்றுதெரியவில்லை குழப்பம் எதனால் மாறினேன்.. ? 

என் மனதுக்குள் ஓர் பேசும் குரல் நீஇன்று ஒருநாள் பெண்ணாகமற்றவர்களுக்கு தெரிவாய்.. இன்று எப்பொழுதும் செய்யும் வேலைகளை செய். ஏங்குவேண்டுமானாலும் செல். ஆனால் அறையில் உட்காரக்கூடாது மீறி வெளியில் செல்லாமல் இருந்தால் இனிகாலம்முழுக்க பெண்ணாக மாறிவிடுவாய்.. கண்களில் இருந்து கண்ணீர் அழுகை யாரிடம் சொல்வது நேரம் ஆக ஆக என்னை நானேமனதைரியத்தை வரவழைத்துக்கொண்டு என்னிடம் இருந்த பேண்ட் சர்ட் அணிந்துக்கொண்டு வெளியில் புறப்பட்டேன்.. இத்தனை நாள்என்னை யாரும் கவனித்ததாக தெரியவில்லை அன்று என்னைஎல்லாரும் நோட்டம் விட்டார்கள்.. தயங்கி தயங்கியே சென்றேன்.. “இந்தமா ஆம்பல மாதிரியா சட்டை ,பேண்ட் போடுவ ஒர்குரல்.. ‘என் நான் பையன் மாதிரி போடக்கூடாதா’  என்னாம்மா படிச்ச திமிறு பொம்பளபுள்ளையா நடந்துக்க… யார் இவங்க என் விரும்பமான சட்டைபோட்டா திட்டுறாங்க.. மனதில் முனுமுனுத்துக்கொண்டே நகர்ந்தேன்.. 

நான் ரோட்டு கடையோரம் சாப்பிட ஹோட்டல் சென்றேன், மறுப்படியும் சுற்றியுள்ளவர்கள் ஏதோ பெண்களை பார்க்காத மாதிரி பார்த்தார்கள்..

ஏன் அண்ணா எல்லாரும் அப்படி பார்க்குறாங்க கேட்டதற்கு..

இல்லம்மா இங்கலாம் பொண்ணுங்க சாப்பிடமாட்டாங்க நீ வந்துஇருக்க”- எனக்கு என்ன சொல்வது தெரில..  சரி சரி 2 இட்லி வைங்க..

பேருந்தில் ஏறினேன் பெண்களுக்கு என்று தனி இடமிருந்தாலும் எப்பவும் போல் ஆண் இருக்கையில் அமர்ந்தேன்.. என் பக்கத்தில் ஒருத்தர் உட்கார்ந்தார் நானும் ஜன்னலொரமா என் மாற்றத்தை நினைத்து கவலையில் இருந்தேன் என் அருகில் உட்கார்ந்த ஆளு ரொம்ப நேரமாக வொரசிகிட்டே இருந்தார்.. கொஞ்சம் தள்ளி உட்காருங்க சொன்னேன் அதற்கு ஏம்மா ஆம்பல சீட்ல நீ உட்காந்துட்டு என்ன சொல்ற வந்துட்டா மீனா மினுக்கி.. எனக்கு யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை இறங்கிவிட்டேன்.  

நடந்து வரும் வழியில் ஓர் பெண் தயங்கி வாடியமுகத்தோடு நின்றுகொண்டிருந்தார் 

என்னம்மா  என்னாட்சி ?

இல்லஅக்கா ! அக்காவா சரி சொல்லு., நாங்க இங்க சுற்றுலா வந்தோம் நான் வழி மாறி வந்துட்டேன் எனக்கு ஏங்க போரதுனு தெரில.. நான் உதவி செய்யலாம்னு வா மா !நான் அழைச்சிட்டு போய்விடுகிறேன் அந்த பெண்ணிடம் போன்நம்பர் வாங்கி ஏங்க இருக்கிறார்கள் என்றுவிசாரித்து அவளை அழைத்து சென்றேன்..அவர்களாம் ரொம்ப தூரம் தாண்டி போய்டாங்க வா நான் உன்னை பஸ்ஸில் விடுகிறேன்.. பேருந்தும் கிடைத்தது என்னிடம் பேச்சிக் கொடுத்துக்கொண்டே வந்தாள், நானும் ஏங்கதங்கச்சி படிக்கிறிங்க கேட்டேன்,சிறு கண்ணீருடம்  இல்லை அக்கா நான் படிக்கவில்லை ஒரு பையன லவ்பண்ண என்னை ஏமாற்றிவிட்டான் விட்டை விட்டு  ஓடி வந்துவிட்டேன் இங்க ஆதர்வற்ற நிலைமையில் இருக்கும்போது ஓர் அனாதை அசிரமத்துல சேர்ந்து அங்க உள்ளவங்களை கவனித்துக்கொண்டு அப்படியே வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு..

ஓர் பெண்ணாக இருப்பது கடினம் கஷ்டம் கா ! வீட்ல ரொம்ப கன்டிசன் போடுறாங்கனு  ஒருத்தன நம்பி வந்த அவனும் என்னைவிட்டு விட்டு போய்டான் இங்க நம்மலாம் அவங்க சொல்கிறதை கேட்டுக்கிட்டு வாழனும் நமக்கு எந்த தனி சுகந்திரமும் இல்லை.. ஏன் மா அப்படி சொல்ற எத்தனையோ பேர் பெண்ணாக இருந்து சாதிக்களையா..

உண்மைதான் அக்கா ! ஆனா பெண்களாம் ஆண்களின் சமம் வெறும்பேச்சிக்கு தான்.. எங்க நம்ம டிரஸ் போட்டா கேலி கிண்டல் அசிங்கமா பார்க்கிறது நம்மல அப்படி இரு இது மாதிரி போடாத சொல்றாங்க.. ஒரு நாளும் பசங்க பார்க்கிர பார்வையில் தான் தப்புனு பேசமாட்டாங்க.. இன்று கூட பணிசுமை காரணாமாக  12மணிக்கு வெளியில் போன.. நம்ம வெளியில் செல்வதனால் தவறு நடக்குது சொல்றாங்க.. நம்ம கஷ்டம்லாம் அவங்களுக்கு எப்படி தெரியும்.. ஆண்களை ஒருநாள் பொம்பலையா மாத்திவிட்டு பார்க்கனும் அப்ப தெரியும் நம்ம வலி ஏன்னானு.. என் தலையில் யாரோ அடிச்ச மாதிரி இருந்தது.. புரிகிறது தங்கச்சி அதுக்குனு ஆண்களை குற்றம் சொல்வது தப்பு.. இல்ல அக்கா! நான் அவர்களை மட்டும் சொல்லவில்லை.  அவர்களுக்கு ஒர் உரிமை சுகந்திரம், கொடுக்கும் போது நமக்கு பிடித்ததை செய்ய அனுமதித்தால் என்ன?

 சரி அக்கா நன்றி நான் இறங்கும் இடம் வந்து விட்டது விடை பெற்றாள்…

நான் வீடு திரும்பினேன்  இரவு 9 மணி..  இன்னும் 3மணி நேரம் என்ன செய்வது என்று கடற்கரை சென்றேன் பல கண்கள் ஒர் பெண்காக என்னை பார்க்க இரவில் அந்த அமைதியான அலை பார்த்தவண்ணம் நடந்ததை நினைத்துக்கொண்டு இனியாருக்கும் எந்த தொந்தரவும் செய்யகூடாது.. பெண்ணாக நடந்துக்கிறது ரொம்ப தைரியம் வேணும்.. பள்ளி வயதுப்பருவம்,  காதல்,  திருமணம்,  வரதட்சணை,  தாய்மை,  சகிப்புத்தன்மை,  பாதுகாப்பு   எதிர்க்கொள்ளும் உடல்ரீதியான பிரச்சினைகள் தாண்டி வாழனும்.. போன் ரீங் அடித்தது கண்ணை திறந்து பார்த்தேன் காலை  7மணி தூக்கி போட்டது ஒடிச்சென்று கண்ணாடியை பார்த்தேன் நான்நானாக தெரிந்தேன் .. என் கனவில் வந்த கனவு தேவதை…