வேற வழி தெரியல

என் சொந்த ஊர் ராம்நாடு, ஊருல வேலையில்லாம லட்சம் பேருல நானும் பிழைப்புகாக மேற்குதேசம் வேலைக்கு வந்த டிப்லோமா முடிச்சிருக்க, இங்கதான் பெரிய கம்பெனி லேபர் கேம்ப் ல அசிஸ்டன்ட் வேலை பார்க்கிறேன், இங்க வேலை செய்ரவங்களுக்கு எதேனும் காயம், உடல்வலி, காய்ச்சல் இருந்தால் மருத்துவமணை அழைச்சிட்டு போய் டாக்டர் காமிக்கனும். அப்படிதான் வேலைக்கு சேர்ந்து ஒருவரை சந்திந்தேன், அவரை பற்றிதான் உங்களிடம் சொல்லனும் இதை எழுதுற! 

அவர் பெயர் ரத்தினம். பெயரை கேட்டதும் ஏதோ அவரை பிடித்துவிட்டது! என்ன உதவியானாலும் நான் செய்வேன், அவருக்கு 55 வயது இருக்கும்.! அப்பா மாதிரி தான் அவரை நான் பார்த்தேன், அவரோட அனுபவம் என்னோட வயசு, சின்ன வயசுல வெளிநாடு வந்துட்டாரு., வீட்ல வேலை, ஹோட்டல் வேலை, பிரிண்டர் கம்பெனி பேனர் ஒட்றதுனு கடைசியா இந்த கட்டுமான கம்பெனியில் வேலை.

ரத்தினம் அப்பாவுக்கு உடல்வலி, அவருக்கு இனிப்பு நீர் நெஞ்சுலி பிரச்சனையும் இருப்பதால். நான் தான் ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போவேன், அப்போ தான் அவரோட நல்லா பேசி பழக்கம், அவர நான் அப்பா தான் கூப்பிடுவ! நான் பலமுறை சொல்லிருக்க உடலுக்கு முடிலனா ஊருக்கு போகலாம் னு,

இல்ல தம்பி, வீட்டில வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்காங்க கட்டி கொடுக்கனும், கடன் இருக்கு சொல்லி முடிச்சுருவாறு! 

கடந்த மார்ச் 2020 கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதும் பரவ! நாடு முழுக்க ஊரடங்கு. என் கம்பெனியும் முடிட்டாங்க இரண்டு மாதம் சம்பளம் இல்லை, நாங்களாம் கம்பெனி ரூம் தங்கியிருந்தோம், முதல் மாசமாவது முணு வேலை உணவு வந்துச்சி பிறகு கம்பெனி சரியான வேலை இல்லாதனால அதையும் நிறுத்திட்டாங்க! ஊருக்கு பணம் அனுப்ப முடியாம, சாப்பிட வழியில்லாம தான் கஷ்டப்பட்டோம். கம்பெனி சொல்லிட்டாங்க 30% வேலையாட்கள் வேலையிலிருந்து நிறுத்த போறாங்கனு.! அதுல அப்பா ரத்தினம் பெயரும் இருந்துச்சி, அன்னைக்கு ராத்திரி என் ரூம் ல தான் இருந்தாங்க, ரொம்ப கவலைப்பட்டாங்க, எப்படி என் பிள்ளைகளை கட்டி கொடுக்கபோறேன், அவர் அழுது அன்னைக்கு தான் பார்த்தேன், கஷ்டம் தான் என்னிடமும் பணமில்லை, 

என்னிடமிருந்த பணம், என் கம்பெனி முன்தொகை பணம் எடுத்து கொடுத்தேன், ரத்தினம் அப்பா, ஊருக்கு போய் 6 மாசம் இருக்கும்! வீட்டு விலாசம் மட்டும் தான் என்னிடம் இருந்தது, எனக்கு கம்பெனி வருட லீவு ஒரு மாதத்திற்கு ஊருக்கு வந்தேன். அப்படியே ரத்தினம் அப்பாவை பார்க்க வீட்டை கண்டுபிடிச்சி அங்கே அம்மாவும் ஒர் தங்கச்சியும் இருந்தாங்க. ரத்தினம் அப்பா தவறிட்டார்னு தங்கச்சி சொன்னதும் பேச ஒன்னுமில்லை, அப்பா நீங்க வந்தா ஒரு லட்டர் கொடுக்க சொன்னாங்கனு அலமாரி இருந்து எடுத்து என்னிடம் லட்டர் கொடுத்தாங்க..

அன்புள்ள தம்பி, என்னை பார்க்க வருவனு தெரியும், நன்றி உன்னை பற்றி வீட்ல சொல்லிருக்க எனக்கு செய்த உதவிய, பெரிய பொண்ணு நான் இங்கே வந்ததும் கல்யாணம் செய்து கொடுத்துட்ட அடுத்த ஊர்ல தான் மருமகன் வீடு, சின்ன பொண்ணு இருக்கா அவளையும் கட்டிக்கொடுக்கனும், நெஞ்சுவலி டாக்டர்ட்ட போகனும் பணமில்லை, வீட்ல யாருக்கும் தெரியாது அப்போ அப்போ வலி வரும்! உன்னிடம் வாங்குன பணம் இதுல வச்சிருக்க! நீ அப்பா சானத்தில் என்னிடம் கொடுத்தாலும் நான் வாங்குன கடன் கொடுக்கனும்! நீ எப்ப வேண்டாலும் என் வீட்டுக்கு வரலாம்! நான் இல்லனாலும் !

நல்ல மனுசன் ! இறப்பும் பிரிவும் வரும் அத தாக்க கூடிய சக்தி தான் வேணும்.! அவர் வீட்டிலிருந்து விடைப்பெற்றேன்.. 

நவாஸின் சிறுகதை

6 சிறுகதையாக நிகழ்ந்ததை எழுதியிருக்கிறேன்.!

  1. செல்வதுரை
  2. தாரம்
  3. பேருந்து உதவி
  4. பாசம் குறைந்திடுமா.!
  5. வேகம் வேண்டாம்
  6. ஸ்கூட்டி ஆசை
  1. செல்வதுரை

அம்பத்தூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசல் தேடி ரோட்டு கடையோரம் நின்றஒருவரிடம் விசாரித்தேன். அவர் “இங்க இருந்து இரண்டு தெரு தாண்டி போகனும் தம்பி என்றார். நான் மஸ்ஜித் (பள்ளிவாசல்) நோக்கி சென்றேன். அவர் பின்னாடியே என்னிடம் வந்து, வா தம்பி 2கீ.மீதூரம் நேரம் ஆகும். நான் அந்த வழியாக தான் போற சைக்கிள்ல ஏறுங்க என்றார்..

சிரமம் வேண்டாங்க நான் போய்கிறேன். நீ ஏறுங்க தம்பி. நானும் சைக்கிள் உட்கார்ந்தேன். சைக்கிளை மிதித்துக்கொண்டே தம்பி அம்பத்தூர் கம்பேனி வேலை செய்கிறீர்களா என்றார். இல்லங்க நான் இங்க Auditing காக வந்த உங்களுக்கு எந்த ஊருங்க ஐயா ‘மதுரை தம்பி ‘..

இந்த வெயில்லையும் செருப்பு போடாம என்னை வைத்து சைக்கிள் மிதிக்கிறீங்க எனக்கு கஷ்டமாகஇருக்கு என்றேன்.!

தம்பி, நான் ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு இருக்க.. உங்க தொழுகைக்கு நேரமாகும், எதிரேஇருக்க பள்ளிவாசல் தான் போங்க வேகமாக என்றார். நானும் நன்றி சொல்லிட்டு உங்க பெயர்என்னாங்கையா என்றேன் செல்வதுரை என்றார்..

2.தாரம்

அந்த கோடிக்கணக்கான turnover பண்ற முதலாளி எனக்கு நல்ல பழக்கம்.. அவருடன் ஒருநாள் காரில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கொஞ்சம் கடுகடுப்பாளர்! வேலை ஆகவில்லை என்றால் கடும் கோபம் வரும் அன்று காரில் பயணிக்கும்போது என்னிடம் “உனக்கு எப்ப கல்யாணம் என்றார். இல்ல சார் கொஞ்ச நாள் போகட்டும் என்றேன்!

எனக்கு கல்யாணம் ஆகி 25வருடம் ஆகிறது, இரண்டு வருடம் முன் தான் மனைவி காலமாய்டாங்க; (அவர் பையன் கல்லூரி படிக்கிறார் எனக்கு தெரியும்) என் பையனுக்கு சின்ன வயசு ஒரு தகப்பனாஎன் பேச்சு எற்பான தெரியல்ல என்ன இருந்தாலும் அம்மா என்ற அன்பு ஆளுமை வேண்டும்.

கவலைபடாதிங்க! கண்டிப்பா பையன் நல்ல வருவான் என்றேன், காரில் இருந்து எதையோதேடியவர் ஒரு சுட்கேஸ் இருந்து புகைப்படத்தை எடுத்தார். இது தான் என் மனைவி ரொம்ப நாள்கழித்து இன்று என் கண்ணில் பட்டது,. அவள் நினைப்பு வந்துவிட்டது, கண்ணீருடன் கார்கண்ணாடி வழியாக வெளியே பார்த்தார்.

பேசுவதற்கு என்னிடம் வார்த்தையில்லை வயதுமில்லை தாய்மை மனைவியின் ஆளுமை விட்டுசென்றபிறகே அறியமுடிகிறது அந்த கண்ணீருக்கு எந்த பணத்தாலும் பதில் சொல்லமுடியாது.!

3.பேருந்து உதவி

அலுவல் வேலை முடித்து வர இரவு 12மணி சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்துவருகின்ற போது எதிரே ஓர் 55 வயதுடைய பெண்மணி சிவந்த கண்கள் பதற்றமான நிலையில் அங்கும் இங்குமாய் அலைந்தவண்ணம் என்னை நோக்கி வந்தார்…

தம்பி, நில்லுங்க வேலூர் போகனும் எந்த பஸ், எங்க போகனும் எனக்கு தெரியல ரொம்ப நேரமாநிக்கிற… சொல்லுங்க! இங்க யார் கேட்டாலும் அங்க கேளுங்க இங்க போங்கனு சொல்றாங்க… ராத்திரி நேரம் கண்ணு சரியா தெரியல.. உதவுங்க

ரோட்டை கடந்து அந்த அம்மாவுடன் பஸ் வரும்வரை காத்திருந்தேன்.. இங்க எவ்வளவு நேரமாநிக்கிறிங்க மா.. 9;மணிக்கு வந்த.. யாருமே உதவுல எல்லாரும் அவங்க அவங்க அவசரத்துக்குபோறாங்க தனியாக இருக்கவும் பயம் தம்பி என்ன எத்தி விட்டுட்டு போகங்க..

இரவு வேலூர் க்கு நேர் பஸ் கிடைக்கவில்லை.. நேரம் கழித்து 1.15 க்கு வண்டி வந்தது.. அம்மாவைஎற்றிவிட்டேன்… நல்லபடியா ஊர் போய் சேர்ந்து இருப்பாங்க நம்புறேன்.!

4.பாசம் குறைந்திடுமா.!

அன்று நான் அலுவலகம் செல்ல பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன், என்அருகில் இரு வயதானவர்கள் நின்றுக்கொண்டு இருந்தார்கள்..

ஜயா, உட்காருங்க ரொம்ப நேரமா நிக்கிறிங்க ஏங்க போகனும்.. இல்ல தம்பி பராவாயில்ல, சொல்லி பக்கத்தில் இருந்த அவரின் மனைவியின் கையை பிடித்து ஒருவரையொருவர்பார்த்துக்கொண்டனர்..

வயது சுமார் 65 மேல் இருக்கும் என் அருகில் அமர்ந்தனர் என்னை பார்த்து நீ என் பேரன் அஸ்வின்போல இருக்க..

‘சிறிய புன்னகையுடன்”மம் எங்க போறிங்க தாத்தா.. கேட்டதுமே இருவரும் கண்கலங்கின, ஏன்ஏன்னாச்சி, இல்ல பா! எனக்கு ஒரு பையன் கல்யாணம் பண்ணி மெட்ராஸ் ல தான் வேலைபார்க்கிறார்.. எங்களை பார்க்க வரது இல்ல. வேலை இருக்கு அது இது சொல்லி நாங்க பார்த்து3வருசம் ஆகுது.. காலை ஊருல இருந்து மகன் மருமகள் பேரன பார்க்க வந்தோம்..

ஏதோ விருந்தாளி போல எங்களை கவனிச்சிட்டு கிளம்ப சொல்லிட்டு இரண்டு பேருமே வேலைக்குகிளம்பிட்டாங்க.. பேரனையும் ஸ்கூல் க்கு அனுப்பிச்சிட்டாங்க.. பையன் பணம் கொடுத்துமெட்ராஸ் சுத்திபார்த்துட்டு போக சொல்லி அனுப்பிட்டா..

என் பையன்தான் உலகமே இன்னைக்கு அவனே எங்கள விருந்தாளிக்கனாக்கா பார்த்து போய்டா.. பேரப்புள்ளையை பள்ளிக்கூடத்துல பார்த்துட்டு ஊருக்கு கிளம்பலாம் நிக்கிறோம்.. எங்களைஸ்கூல்’ல பார்க்க விடுவாங்கலானு தெரில.! அடையார் பஸ் ஏறனும்.. அவர்களை பேருந்தில் வழி அனுப்பினேன்..

படித்து என்ன பிரயோசனம் யாருக்காக வாழ்கிறோம் யாரால் வாழ்கிறோம் பதிலே தெரியாமல்பயணிக்கிறோம் அன்பு பாசம் மனிதநேயம் சில சிட்டி லைஃப் மறைந்து விடுகின்றனர்..

5.வேகம் வேண்டாம்

அவருக்கு 65 நிரம்பிய வயது சென்னை. OMR IT கம்பெனியில் காவலர் பணி.

அவரை முதல்முதலாக அன்று தான் டீ கடையில் சந்தித்தேன். ஒரு 15நிமிடம் பேசியிருப்பேன்.. நல்லவொரு மனிதர் கலகலபாக பேசிய அரசியல், வாழ்க்கை அனுபவங்கள்.. பேசி விடைபெற்றுரோட்டை கடந்த அடுத்த நொடி ஏங்க இருந்தோ வந்த பைக் அவர் மீது மோதியது உடல்முழுவதும்ரத்தம் வழிகிறது.. இரு வார்த்தை தான் தண்ணீர் தண்ணீர் என்னை பார்த்து கேட்டார்கொடுப்பதற்குள் இறந்துவிட்டார்..

எத்தனையோ விபத்து நம்மை கடக்கிறது.. சில நிமிடம் பேசிய எனக்கே அவர் உயிர் பிரிவதைதாங்க முடியவில்லை.. அவரின் குடும்ப நிலை எப்படி இருக்கும்.. உயிரை விட பைக் வேகம் வீரம்என்று நினைப்பவர்கள் தனியாக சாகசம் செய்யுங்கள்.. உங்கள் வேகத்தால் இன்னொரு அப்பாவிஇறப்பது என்ன நியாயம்..

6.ஸ்கூட்டி ஆசை

வேலைக்கு சென்னை தாம்பரம் டூ மயிலை ரயிலில் செல்வது வழக்கம் தினமும் மாலை வேலைமுடிந்தவுடன் ரயிலில் என்னுடன் பல பேர் சொம்பலும் அசதியுடன் பயணிப்பர் என் அருகில்38வயதுதக்க பெண்மணி என்னிடம் தம்பி என் செல் யூடியூப் (YouTube) யில் Scotty வீடியோ போட்டுதாங்க கேட்டார் நானும் வீடியோ எடுத்துகொடுத்தேன் என் மகள் எனக்கு save பண்ணி கொடுத்தால்அழிந்துவிட்டது தம்பி எனக்கு Scotty வாங்கனும் பலநாள் ஆசை 38000/- லாம் நல்ல Scotty இருக்குமேடம் என்றேன்..

இல்லை தம்பி ஆசை பட்டா எல்லாமே அடைந்துவிட முடியுமா என் சம்பளம் அவரு சம்பளமே வீட்டுசெலவுக்கே சரியாகிடும் பார்பதோட சரி ஒரு நாள் வாங்குவன் தம்பி என்றார்

சில ஆசைகள் சம்பாரித்தாலும் எளிதில் கிடைப்பதில்லை

அவங்க போனபிறகு எங்க வீட்டு பெண்மணிகளை நினைத்துபார்த்தேன்..

முஹம்மது நவாசுதீன்

அவளும் அன்பும்

பல வருடம் கழித்து அவளும் நானும் சந்தித்து பேசுகின்ற சூழல், எப்படி இருக்க ! என்றுதொடங்கியது உரையாடல், 15 வருடம் முன் நடந்த நினைவுகள் கண் முன் வந்துபோயின ! அது ஆழ் மனதின் மறக்க முடியாத வடுகள் ,

எனக்கு அம்மாவும் மாமாவும் தான், கோயம்புத்தூரில் வேலை, பொண்ணு பார்க்க போறோம் என்று அம்மா என்னிடம் வெள்ளிக்கிழமை அலுவலக வேலை விடுப்பு எடுத்து வர சொன்னாங்க.

வெள்ளிக்கிழமை அவளை பார்க்கிறேன் ! அவள் அழகு ! காபி கொடுத்ததும் அம்மாவை பார்த்தேன், அம்மா பெண்ணை பிடித்திருக்கு என்றார்கள், அவளுடன் நான் பேசனும் என்றேன் மாடியில்இளஞ்சிவப்பு மாலை நேரம் ஒருவித தயக்கதுடன் நீங்க சொல்லவே இல்ல என்னை பிடிச்சிருக்கா என்றேன் பிடிக்கலனா தலையை அசைத்துவிட்டு போயிருப்பேன், இப்படி நின்றுபேசியிருக்கமாட்டேன் ! அவள் சொல்லும் அழகை கேட்கும் போது தென்றல் காற்று வீசியது போல ! உணர்ந்தேன்

பிறகு அம்மா வர சொன்னாங்க கிளம்பிட்டோம், அங்கே அம்மாவிடம் அவங்க வீட்ல என்னபேசுனாங்கனு எனக்கு எதும் தெரியல, அம்மாவும் அதைப்பற்றி என்னிடன் பேசல, எனக்கு அவளை எப்பலாம் பார்க்கனும் தோணுதோ அப்போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் சந்தித்துக்கொண்டோம், நல்ல பழக்கம் பேசி புரிந்துக்கொண்டோம், அந்த நேரம் என்னிடம் கைப்பேசி இல்லை , அவளை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது அவளும் இதுபோல என்னிடம் நிறையநேரம் சொல்லி இருக்காள் !

ஆனால் அம்மா என் கல்யாணத்தை பற்றி பேசமாற்றாங்கனு தெரிலனு மாமாவிடம் கேட்டேன் அவங்க குடும்பம் எங்க சாதியை பற்றி கேட்டு இருங்காங்க, அம்மா என்னிடம் இதுவரை சொன்னதில்லை அம்மாவும் அப்பாவும் கலப்பு திருமணம் ! சாதி என்றால் என்னவென்றே தெரியாமல் தான் வளர்த்தாங்க , ஆனால் அது மற்றவர்களுக்கு சுயசாதி பெருமை, சாதி ஏற்ற தாழ்வு சாதியப்பற்று எவ்வளவு ஊறி போயிருக்கு என்ற அன்று தான் தெரிந்தது , பிறகுநானும் அவளும் சந்திப்பது தெரிந்ததும், பிரச்சனை அதிகமாயின ! சாதிய சீண்டல்கள் , அவமானம்படுத்துனாங்க !

யாருக்கும் தெரியாமல் ஒரு நாள் அவளை சந்தித்தேன், என் கூட வந்துவிடுகிறேன் என்றாள், அப்பா விட்ல எல்லாரும் ஒருவிதமா சொல்லிக் காட்டுறாங்க, வெறும் பொண்ணு பார்க்க வந்தது தானேனு ! ஆனால் நான் உன்னை விரும்பி தான் நேசிக்கிறேன், என்னை அழைச்சிட்டு போஎன்றாள் , எனக்கு ஒருநாள் டைம் கொடு நான் வீட்டில் வந்து பேசுகிறேன் என்றேன். அடுத்த நாள் அவள் அப்பாவை சந்தித்தேன் , அன்று இரவே என் அம்மாவை மிரட்டிட்டு போனாங்க,

என்னையும்அன்று இரவு சில ரவுடிகளை விட்டு அடித்தார்கள் , இன்றும் அந்த தழும்பு இருக்கு அன்று இரவே என்வீட்டிற்கு அவள் வந்தாள் யாருக்கும் தெரியாமல், அம்மா தான் நீங்க எங்கையாவது போய் பொழச்சிக்கோங்கனு அனுப்புனாங்க ! அம்மாவை விட்டு போக மனசு இல்லை , மாமா தான் நீ போ ! நான் பார்த்துகிறேன் என்றார். இரவு பேருந்து ஏறுவதற்குள் மாமாவை கொண்ணுட்டாங்க ! அம்மா மருத்துவமனையில் இருக்காங்க என்று தெரிந்ததும் அவள் ஒரு வார்த்தை சொன்னா நீ முதலில் அம்மாவை காப்பாற்று என்று ! அழைத்துக் கொண்டு போவதற்குள் என்னையும் அடிச்சி அவளைஅழைச்சிட்டு போயிட்டாங்க ! நானும் அம்மாவும், மாமாவை பறிகொடுத்த வருத்ததில் காயத்துடன் மருத்துவமனையில் , அடுத்த நாள் அவளின் அம்மா வை கொண்ணுட்டாங்க சுயசாதி பெருமைகொண்டவர்கள் ! என்ன நடக்கிறது தெரியவில்லை என்னால் உடலில் காயங்களுடன்நகரமுடியவில்லை, அடுத்த வாரம் அவங்க அப்பா என்னை வந்து பார்த்தார்

கண்ணீருடன் உன்னால்தான் என் மனைவியை இழந்திருக்கிறேன், மானம் போய், மரியாதை போய் , என் பொண்டாட்டியை கொண்ணுட்டியே என்னை பார்த்து கேட்கும் போது நான் அதை செய்யவில்லை, எழு மாதம் கழித்துதான் என் குடும்பத்தை காட்டி சாதி அரசியல், சாதிய சண்டை நடத்திருப்பது தெரியவந்தது, அவளை சமாதான படுத்த சென்றேன்.

என்னை பிடிக்காதவாறு, உன்னை அன்று உங்க அம்மாவை தான்பார்க்க சொன்னேன் , என் அம்மா வை கொண்ணுட்டியே ? நான் புரிய வைக்க அவள் மனசு முயற்சிக்கவில்லை ! எங்கே அவள் தனது அப்பாவை இழந்துவிடுவாளோ என்ற பதற்றம் தான். உன்னால் இழந்தது போதும் கடைசி வரை என்னை மாற்ற முயற்சிக்காதே சென்றுவிட்டாள்,

நாங்கள் ஒன்னு சேரல 15 வருசம் ஓடிவிட்டது அவளுக்கும் கல்யாணமாகி குழந்தை இருக்கு ! எனக்கும் பையன் இருக்கான் !

இப்பலாம் யாரு சாதி பார்க்கிறார்கள் என்ற கேள்வி நேரத்தில் ஆணவக்கொலை, சாதிய கொலை, சாதிய வேறுபாடு , சாதிய தீண்டாமை நடந்துகிட்டு தான் இருக்கு , நடக்காதவங்களுக்கு அதுவெறும் செய்தி , என்னோட வாழ்க்கை மாறினாலும் இழப்பு, காதல் தொலைத்துவிட்டது., நீங்கள் நினைக்கலாம் எங்க அம்மா அன்னைக்கு பார்த்து கேட்டு போயிருக்கலாம் என்று ! அப்படி நீங்க நினைக்கிற வரை அந்த தீ ஒவ்வோரு உயிரையும் மனிதனையும் காயப்படுத்தும் கொண்றுவிடும் , நாங்க பண்ணது தப்பில்லை இந்த சமூகம் செய்தது தான் தவறு!

நம்மால் இன்னும் மாற்றமுடியவில்லை கோபமும் ஆத்திரமும். இன்னும் காமராஜர், முத்துராமலிங்கம்வஊசி போன்ற தலைவ‌ர்க‌ளை பொது தலைவராக பார்ப்பதில்லை. அவர்களை ஒர் சமூகத்திற்குள்அடைப்பது தான் கவலை

பிரிந்தது நானும் அவளும் மட்டுமில்லை அவளுடைய அன்பும் தான் ஏதோ ஓர் இடத்தில் வாழ்ந்துட்டுஇருக்கும் எங்களின் காதல்.

அப்பா-வாக்கப்பட்டேன்

மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுள்ளார் ! கைப்பேசி ஒலி அடிக்குபோதெல்லாம் பதற்றமும் எதிர்பார்ப்பும்! எந்த செய்தி என்று என்ன செய்வது !

வெளிநாட்டில் இருந்துக்கொண்டு மனைவியின் வலியையும் பிள்ளையும் தேகமும் தொடமுடியாத வலி., நல்ல செய்தி வந்திடக்கூடாதா ! நெருங்கிய நட்புடன் மனைவி மருத்துவமனை அனுமதித்திருக்கிறார் என்றேன் ! பயம் கொள்ள வேண்டாம் என்றார்கள் ! இத்தனை நாள் சொல்வது எளியது நினைந்தேன் ! அந்த இடத்தில் இருந்து உணர்ந்தால் தான் தெரிகிறது., வலி யில்லாம பிறக்குமா என்று வீட்டு பெண்களிடம் கேட்டேன் சிரித்துக்கொண்டே உன் அம்மாவிடம் கேள் என்றார்கள் ! அம்மா புன்னகையுடன் நீ பிறக்கும் போது வலி இல்லை என்றார்கள் ! இருந்தும் பிரசவ வலியை பற்றி படித்திருக்கிறேன் ! உயிர் போகும் என்றார்கள் ! எழும்புகளை உடைப்பதுபோல் இருக்கும் என்றார்கள் ! நினைக்க நினைக்க என்ன செய்வது எப்படி தாங்கிக் கொள்வாள்., பெரிய தண்டனை கொடுத்துவிட்டேனே! ஊரடங்கு உத்தரவு ! சொந்தங்கள் ஒவ்வொரு பக்கம் ! கடைகள் அடைக்கப்பட்டுள்ளன !

வாகனங்கள்முடங்கியுள்ளது.! மகன்/மகளுக்கு பெரிய கதை இருக்கு ஆனால் தகப்பனாக என்ன செய்வது ! அத்தா நீ ஏன்இல்லை என்று கேட்டால் நாளை என்ன சொல்வது ! பிறப்பது ஆணா , பெண்ணா என்று சிந்திக்கதோன்றவில்லை ! அவள் வந்தால் போதும் நினைந்தேன் கடைசியாக தொலைப்பேசி அழைப்பில் குழந்தை பிறந்துள்ளது என்றார்கள் !

அப்பாவாக்கப்பட்டேன் – 13-04-2020

அனிஸ் தமீமா

அவள் மென்மையானவள் ! ஒவ்வொரு ஆண்ணிற்கு பின் ஒர் பெண் இருப்பாள், அவள் நம்மில் நம்பிக்கைக்குரியவள். பூக்களும் மென்மையிழக்க அனிஸ் தமீமா நாட்களை எழுதுகளாக வடிவமைக்கிறேன்..

ஒர் பெண்ணின் வாழ்வின் வெற்றி தோல்வி, வலியும் எந்த ஒர் ஆணாலும் அளவிட முடியாது.. ஒவ்வொரு நாளும் போராட்டத்தை சந்தித்தவள், கோபக்காரி, திமீருக்குரியவள் என்று இவ்வுலகம் அவளை எதிர்த்து நின்றாலும். தன்நிலை மாறாமல் தன்னை வலிமைமிக்க ஆற்றலாக வடிவமைக்க தொடங்கினால். எத்தனையோ கட்டுரைகள் ஆண் வீரனுடைய வரலாற்றை படித்திருப்போம் ஆனால் அதன் பின் மறைந்திருக்கும் பெண்ணின் அன்பு அறவணைப்பும் வெளிக்கொண்டதில்லை..

தமீமாவின் வாழ்க்கை மற்ற பெண்களைபோல் இருக்ககூடாது என்று வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தாள். ஆடைகளால் தன்னை அடக்கிய ஆணாதிக்கத்தில் இருந்து ஆடையின் சுதந்திரத்தை மாற்றம் பெற்றவள். இவ்வுலகம் எதையெல்லாம் பெண்களுக்கு தடைவிதித்திற்கோ அதையெல்லாம் எதிர்த்து நின்றவள், கல்வி, வேலை, எந்த ஒர் இடத்திலும் கேள்விக்கேட்டும் பெண்ணாக தன்னை காக்கும் பொருட்டு சண்டையிட தற்காப்புக்கலை கற்றுக்கொண்டு எதிர்ப்பாலினத்தை விட எந்தவிதத்திலும் தன்னை குறைத்து மதிப்பிடக்கூடாது போட்டிகள் பரிசுகளை சொந்தமாக்கினாள்.

பெண்களை எந்தவிதத்திலும் தாழ்த்த ஒர் கூட்டம் எல்லா இடத்திலும் இருக்கும் அந்த கூட்டம் தமீமாவையும் விட்டுவைக்கவில்லை ? போகின்ற இடமெல்லாம் வார்த்தைகளாளும், பார்வைகளாலும் மனதை காயபடுத்திக்கொண்டே ஒர் கட்டத்தில் தாய்மை பற்றியும் தன் கற்பைப்பற்றியும் கலங்கப்பட்டபோது.. அந்த மனநிலையில் இருந்து வெளியேற காதல் காரணமாயிற்று ,

தமீமாவின் காதல் , இத்தனை போராட்டத்தை கடந்தவள் காதலில் கறையத்தொடங்கினால், காதலை நேசித்தவள் காதலனையும் நேசிக்க தொடங்கினால் உயிரும் கொடுக்க துணிந்தவளிடம் மதம் அவளை தடுத்தது. தனக்கு உயிர் தந்த தந்தையின் அன்பு , காதலை ஏற்க மறுத்தது. ஒரு பெண்ணிற்கு இந்த இடத்தில் முடிவெடுப்பது எத்தனை குழப்பங்களையும் , வலியையும் தரும் என்று வார்த்தைகளால் கூறிவிட முடியாது. காதலில் உண்மைதன்மையை தந்தையிடத்திலும், தந்தையின் நேசத்தை காதலனிடமும் புரிய முயற்சித்தார். என்ன செய்வது ! ஆண் எப்பொழுதும் ஆணாகவே இருக்கின்றான். பெண் இந்த இடத்தில் தோற்ககடிக்கபடுகிறாள் ! பாதுகாப்பாக இருந்த காதலனின் அன்பும் தூரமாக செல்ல ! அன்பை பகிர்ந்த தந்தையின் பாசமும் விலகிச்செல்ல தனிமை நெருங்கியது மனவலியில் இருந்து வெளியேற Georgia சென்றாள்

காற்றும் சூழலும் சுகந்திரமாக இருந்தாலும் தனக்குள் உள்ள மனஅழுத்தம் மாற்றமுடியாமல் மற்றவர்களிடம் பேசுவதை குறைத்துக்கொண்டு தனக்குள் உணர்வை இழந்து schizophrenia மனச்சிதைவு நோய் அவளை சூழ்ந்துக்கொண்டது..

அதில் இருந்து மீள அவள் எடுத்துக்கொண்ட ஆயுதம் பெற்றோர்யில்லாத குழந்தை அரவணைப்பது.. தேடிச்சென்றால் ஆதரவும் அன்பு நம்பிக்கையில்லா சூழலில் வாழும் குழந்தைகளை தத்தெடுத்தால்.. அவளுக்கு தெரியும் என்றோ ஒருநாள் உயிர் போகும் அதற்குமுன் அவளுடைய ஆசை எல்லாம் தொடங்கிய காரியத்தை மனநிறைவோடு செய்யவேண்டும் ! நலம் என்ற இல்லம் சிறுபுலியூர் தொடங்கப்பட்டு அதில் காப்பாளராக ஆசிரியராக இயங்கிக்கொண்டிருக்கிறாள்

அனிஸ் தமீமா போராட்டகுணம் கொண்டவள் – நவாசுதீன்

அம்மாவின் கடிதம்

அந்த மாலை நேரம் மனதில் நிம்மதியில்லாமல் வீட்டில் குட்டி போட்ட பூனையாக சுற்றிவலம் வந்தேன் சரி நேரம் போக பழைய பெட்டியை சுத்தம் செய்ய அந்த கடிதம் கண்ணீல் தென்பட்டது அம்மாவின் கடிதம், அம்மா எனக்காக எழுதிய கடிதம்

அம்மா வை பிரிந்து 3 வருடங்களாகிறது அம்மா பக்கத்தில் இருந்தபோது பசியில்லாமல் கவலையில்லாமல் வாழ்க்கை சென்றது,. எனக்காக பார்த்துப் பார்த்து சமைத்து தருவார் வெளியில் சென்று வீட்டுக்கு திரும்பும்போது அம்மா என்று அழைப்பேன் அம்மா இல்லாத சமயம் அம்மா ஏங்கே என்று கேட்பேன் இன்று முற்றிலுமாக பிரிந்துவிடுவார் என்று நம்ப முடியவில்லை…,

கடிதத்தை இத்தனை வருடங்கள் படிக்கவில்லை பிரித்ததும் அன்பு மகனே வார்த்தை என்னை கொன்றுவிட்டது ! ஆரோக்கியத்துடன் நலமாக இருக்க என்றும் அம்மா இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் மாதம் அனுப்பிய பணம் கிடைக்கப்பெற்றேன்., பேத்தி மருமகள் எப்படி இருங்காங்க’! இந்த தடவையாவது ஊருக்கு வா தம்பி ! உன்னையும் பேத்தியும் பார்க்க கண் தேடுகிறது.. (என் கண்ணீர் கடித்ததின் எழுத்துக்களை அழிக்க தொடங்கியது அம்மா வை நான் என் பார்க்கவில்லை கடைசி நிமிடத்திலாவது அம்மாவுடன் இருந்திருக்கலாம்.. )

உனக்கு பிடித்த நெல்லிக்காய் கொய்யாவும் வீட்டு மரத்தில் பறிக்க ஆளிளாமல் வீணாகிறது.. பள்ளியில் படித்த உன் நண்பன் ரசூல் தான் எனக்கு காய்கறி வாங்கிகொடுப்பதும் மருந்து வாங்கி கொடுக்கிறான் .,. தனியாக இருந்து பழக்கப்படுத்திக்கொள்கிறேன் ஆனால் இந்த வயதான உடல் ஏற்றுக்கொள்ளமறுகிறது.,. சின்ன வயதில் உன்னை தூக்கிய உடம்பு இன்று பலமிலந்து போய்விட்டது . வீட்டில் வேலைசெய்ய அனுப்பிய வள்ளியும் சரியாக வரவில்லை.., வீட்டில் நீ வைத்த மல்லிகை செடியில் பூ பூக்க தொடங்கியுள்ளது., பறிக்க யாருமில்லை.,

தைரியமாக இருந்துக்கொள் யாரையும் அனுசரித்து நடந்துக்கொள். அம்மா இல்லை என்று எந்த விதத்திலும் கவலைக்கொள்ளாதே மனைவியும் மகளையும் பார்ததுக்கொள்., எந்த துணையும் நிரந்தரமில்லை ராஜா! அம்மாவுக்கு அப்பா யில்லாத கவலையை நீதான் போக்கினாய் இன்று பெற்ற மகனையும் விட்டு பிரிந்து இருப்பது நெருப்பில் இருப்பதுபோல் உள்ளது.,உங்களை எல்லாம் பார்க்கனும் பேத்தியுடன் விளையாட ஆசையாகவுள்ளது., உங்க அப்பா மகன் தான் பிறப்பார் என்று என்னிடம் கூறியபோது.. நீ வந்து ராஜாவாக பிறந்தாய் உங்க அப்பா என்னை விட்டு பிரிந்தபோதும் அதைதான் நினைவு கூறினார்., என் மகன் உன்னை பார்ததுக்கொள்வான் என்று நீயும் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறாய்.. தாயோட ஆசை சந்தோஷம் எல்லாம் நீ தான் ராஜா !

என்னோட கடிதம் உனக்கு கிடைக்கும்போது என்னை பார்க்க வா பா ! உன்னை பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்துடன்.. அன்புள்ள அம்மா

கோவமும் ஆத்திரமும் என்மீது அதிகமானது அம்மா வை நான் தவறவிட்டேன் கண்கள் குளமாயின அம்மா அம்மா என்று மனதில் தொடங்கிய அந்த வார்த்தை நெஞ்சில் இறுக்கத்தை அதிகமாக்கின, யாருக்காக ஓடினேன் என்று தெரியாமல் இந்த வாழ்க்கை எனக்கு கொடுத்தவர்களை தவறவிட்டுவிட்டேன் ! அம்மா மன்னித்துவிடு…

பிரிந்த மகன்களுக்கு சமர்ப்பணம் – நவாசுதீன்

கடைசி கண்ணீர்

நிசப்பதமும் அழுகையும் என்னை சூழ்ந்துக்கொண்டது அனைவரின் கவனமும் என் மீது , வந்தவர்களை என்னால் அழைக்க முடியவில்லை அவர்களிடம் பேசமுடியவில்லை. நான் என் அண்டை வீட்டாரிடம் பகைத்துக்கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் அவருடன் உறவாடவில்லை ஆனால் அவரும் என்னை கவலைதோய்தமுகத்துடன் எனக்கு அண்மையில் நின்று என்னை கவனித்துக்கொண்டு இருக்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கு மேல் எந்த தொடர்புகளும் இல்லாமல் இருந்த என் நண்பன் அவன் என் அருகில் நின்று பார்வையால் என்னிடம் பேச முயல்கிறான். அவன் முகம் நோக்கும்பொழுது பள்ளி பருவம் பசுமை நினைவுகள் என்னுள் கடந்துசெல்கிறது. இனி பழைய நாட்கள் திரும்பபோவது இல்லை .

எத்தனை நாட்கள் நண்பனின் குடும்பத்துடன் உணவு உண்ட அனுபவம்., மனதில் இன்றும் சுவைகின்றது காலம்கடந்துவிட்டது படுக்கைக்கையும் என்னை அழைத்துக்கொண்டது.,
தொலைதூர உறவுகள் அடுத்த ஊரில் இருந்த இரத்தபந்தங்கள் தாய் வழி மற்றும் தந்தை வழி சொந்தங்கள் என்னை சுற்றி ஒருவித ஏக்கங்களும் என்னை பார்கிறார்கள். நான் எந்த நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்ளவில்லை சொந்தங்களிடம் நெருங்கி பழகுவது இல்லை. இன்று நான் படுக்கையில் இருக்கிறேன் என் உடம்பில் ஒர் அசைவுமில்லை கண்களால் மட்டுமே என் வார்த்தையும் வந்தவர்களை கடத்துகிறேன். என் பார்வையின் இறுதியில் நான் இரண்டு இலட்சம் கடன் வாங்கி இருந்த கடன்காரர் அவரிடம் வாங்கிய பணத்தை எப்படி தராமல் போய்விடுவனோ என்ற பயம்., பயம் என்றவுடன் என் கண்கள் என் மனைவியையும் மகளையும் தேடுகிறது அவர்களோ என் தலை பகுதியில் அமர்ந்திருக்கிறார்.,

மகள் மிக பிரியமாய் வளர்ந்தவள் அவள் ஆசைகளை நிறைவேற்றிவிட்டேனா? தகப்பனாக என் கடமைகளை முடித்துவிட்டேனா? என்று எனக்கு தெரியவில்லை அன்புமகள் அழுகையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அழதே என்று கூறவும் முடியவில்லை., என் மனைவி எனக்காக குடும்பம் சொந்தங்களை விட்டு வந்தவள் இன்று நான் அவளுக்கு முன்னால் செல்கிறேன் பாசம் அன்பு அறவணைப்பு காதல் சண்டையை கற்றுத்தந்தவள் நான் இன்று அவளிடமிருந்து பிரிந்துசெல்கிறேன், இனி யார் என் மனைவியை மகளை கவனித்துக்கொள்வார்கள் என்று நினைந்தால் உயிர்பிரியும் வலியை அது மிகைக்கிறது

என் கடந்த காலங்களில் என் தாய் தந்தையுடன் சேர்ந்து வாழ்ந்த வீடு இனி இது எனக்கு சொந்தமில்லை.. அற்ப்பலபத்திற்க்காக வியாபார சந்தர்பங்களில் பலமுறை பொய் சொல்லிருக்கிறேன் ஏமாற்றிருக்கிறேன் என்னை காதலித்த பெண்ணிடமும் உண்மையாக இல்லை அவளையும் இழந்துவிட்டேன், நண்பர்களிடம் சட்டையிட்டுகிருக்கிறேன். நட்பு பாரட்டியது இல்லை
இல்லாத எழை குழந்தைகளுக்கு நான் எதுவுமே செய்தது இல்லை நான் வாழ்ந்த நாட்களை வீண் அடித்துவிட்டேன்
பணம் பணம் என்று ஓடியே பாதி வாழ்க்கையின் இன்பத்தை தொலைத்துவிட்டேன். சொந்தபந்தங்களை தவர விட்டுவிட்டேன் இனி நான் நினைந்தாலும் இழந்த வாழ்க்கையை திரும்பப்பெறப்போவதில்லை.

எனக்கு தெரிகிறது என் உயிர் இன்றுபிரிந்துவிடும் என்று.., நான் என் மனைவிடம் மகளிடம் பேச முயற்சிக்கிறேன் என் வாயில் பால் ஊற்றுகிறார்கள்.,
மனித வாழ்க்கை அவ்வளவு எளிதல்ல நான் இறந்தபிறகு எங்கு செல்வேன் என்று தெரியவில்லை ஆனால் உலகில் கழித்த நாட்களை தவறவிட்டுவிட்டேன்.,
என் கண்கள் வழிபிதுங்கி மொத்த இரத்தஓட்டமும் நின்றுவிட்ட இறுதி கண்ணீருடம் கண்களை மூடுகிறேன்

என் உடலை முதல்முறை எதிரில் நின்று நான் பார்க்கிறேன், அழுகை சத்தம்கேட்கிறது என் முகத்தை மூடுகிறார்கள் நான் உங்கிளிடமிருந்து விடைப்பெறுகிறேன் கடைசிகண்ணீருடன்…….

மனைவி அமைவதெல்லாம்

திருமணம் முடிந்து இரண்டு வருடம் கழித்துதான் தேன்நீலவு சென்றோம். திருமணக்கடன் , என்னுடைய கல்விக்கடன் அடைக்கவே சம்பளம் சரியாகிவிட்டது என் மனைவி எனக்கு மிகவும் பிடித்தமானவள் என்னிடம் அனுசரித்து நடந்துக்கொள்வாள்.. அவள் ஆசை இந்தியாவை சுற்றவேண்டும் என்று ஆனால் என்னால் தேனி க்கு மட்டுமே அழைத்துச்செல்ல முடிந்தது திருமணத்திற்கு பின் அவளை வாங்க போக என்றே அழைத்தேன் ஒருநாள் என்னிடம் இனி என்னை வாங்க என்று அழைக்காதீர் என்று அன்பு கட்டளையிட்டாள் அன்றிலிருந்து அவளை என்னவள் என்றே அழைப்பேன் நான் அவளிடம் என் முந்தைய வாழ்க்கை பற்றி சொல்லவேண்டும் என்று இருந்தேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை ,

எங்களுக்கு இன்னும் குழந்தை பாக்கியமில்லை என்று சொந்தங்கள் உறவுகள் பேச ஆரம்பித்தார்கள் எங்களுக்கு அது மனசங்கடங்களை தந்தது.. நான் வீட்டில் தனியாக உள்ளேன் வேலைக்கு சென்றாள் கொஞ்சம் மன ஆறுதலாக இருக்கும் என்றாள் முதலில் வேண்டாம் என்று நினைத்தேன் பிறகு சம்மதித்தேன் இருவரும் வேலைக்கு சென்றோம் சில மாதங்களிலே எனக்கு பதவி உயர்வு என்னை சிங்கப்பூரில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றுவிட்டார்கள் அந்த சமயத்தில் மனைவி கருவுற்றுருந்தால் எனக்கு போக மனமில்லை மனைவியின் வற்புற்தல் கடன் என்னை அவளிடமிருந்து பிரித்துவிட்டது தினமும் அவளின் நினைவு !!

அவளை அவங்க அம்மா வீட்டிற்கு போக சொன்னேன் உங்களை மதிக்காத வீட்டிற்கு நான் போகமாட்டேன் குழந்தை பெற்ற பின்னே செல்கிறேன் என்று பிடிவாதமாக இருந்தாள் தினமும் போனில் எனக்கு இங்கு அலுவலகத்தில் தோழி கிடைத்திருக்கிறாள் அவள்தான் எனக்கு துணையாக இருக்கிறாள் என்றாள், மனைவிக்கு பிரசவ வலி எனக்கு என் அம்மாவிடமிருந்து போன் “உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அவளின் தோழியே மனைவியை மருத்துவமனை அனுமதித்து பக்கபலமாக இருந்திருக்கிறார், அளவற்ற மகிழ்ச்சி சந்தோஷம் நான் சிங்கப்பூரில் இருந்து குழந்தையை பார்க்க வந்தேன் வீட்டில் அனைத்து சொந்தங்களும் மனைவியின் முகம்பார்கக மகளின் சிரிப்பை பார்க்க சொல்ல வார்ததையில்லை

மனைவியின் அருகில் என் முன்னால் காதலி பார்த்தவுடன் அதிர்ந்துவிட்டேன் சில நிமிடம் மவுனமானேன் ! மனைவி என்னிடம் ஏன்! அப்படி பார்க்கிறிங்க உங்க காதலியை என்று சொன்னதும் மறுஅதிர்ச்சி.. நான் என்றுமே என் பழய காலத்தை சொன்னதில்லை எப்படி இருவரும் என்று திகைந்தேன். நான் அடிக்கடி உங்களிடம் கூறியிருக்கிறேன் என் அலுவலக தோழி இருக்கிறாள் என்று அவள்தான் இவள் என்றாள்.. “சரி நீங்க பேசிகிட்டு இருங்க எனக்கு வேலை இருக்கிறது என்று மனைவி நகர்ந்தார்

“எப்படி இருக்க என்றேன் ம்ம நல்லா இருக்க என்றாள் காதலி -உனக்கு குடுத்துவச்ச மனைவி அமைந்திருக்கிறது தலையை அசைத்தேன்..
உன் மனைவிக்கு நான் சொல்லவில்லை அவளுக்கு என்னை பார்க்கும் முன்னே நம் முன்காதலை பற்றி தெரிந்துந்திருக்கிறாள் கொஞ்சம் நிமிடம் பேசினேன் சரி எனக்கு நேரமாயிற்று நான் கிளம்புறேன் என்று விடைப்பெற்றால்

தயக்கத்துடனே மனைவியிடம் மன்னித்துவிடு உன்னிடம் மறைத்ததிற்கு என்றேன் மனைவி சிரித்துக்கொண்டே நான் எதுவுமே நினைக்கவில்லை உங்களை பற்றி தெரிந்துக்கொள்ளவே ஆசைப்பட்டேன் எனக்கு எந்த கோபமுமில்லை என்றாள்

சரி எனக்கு தூக்கம் வருகிறது என்று திரும்பி படுத்துக்கொண்டாள் என் கண்கள் மேலே உள்ள காற்றாடியை பார்த்த வண்ணம் என் கண்களில் இருந்து என்னை மீறி கண்ணீர் வந்தது சில நிமிடம் மனைவியின் விரல் கண்ணீரை துடைத்தது.. என்னங்க நான் எதுவுமே நினைக்கவில்லை சந்தகபடவுமில்லை உங்களை பற்றி எனக்கு தெரியும் ஒரே ஒரு வார்த்தை கேளுங்கள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை நான் தொலைக்க விரும்பவில்லை கடைசி உயிர் வரை உங்களுக்கு காதல் மனைவியாக வாழ வேண்டும் என்று கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்..

“மனைவி அமைவதெல்லாம்”

மெரினா போராட்டம்

மெரினா , நான் 2017 ஜனவரி அங்கு தங்கியிருந்த சமயம் PETA என்ற அமைப்பு தொடர்ந்த ஜல்லிக்கட்டு தடை எதிர்த்து இளைஞர்களால் இணைந்த கூட்டம் 3ஆம் நாள் காணும் பொங்கல் முடிந்து போராட்டம் பெரிதாகிறது மெரினா செய்திகள் அறிகிறேன் போராட்டம் என்றால் வழக்கம்போல் நடக்கும் என்றே எண்ணினேன் அன்று இரவோடு இரவாக செய்தி பரவுகிறது எல்லாருக்கும் இருக்கும் உள்கோபம் பற்று ஆதங்கம் வெளிப்படுகிறது அடுத்த நாள் காலை நான் அதைப்பார்க்க சென்றேன் பெரும் மாணவர்கள் இளைஞர்கள் கூட்டம் விவேகானந்தர் மண்டபம் முன் பார்த்ததுமே மெய்சிலிர்தது நடந்து உள்ளே செல்ல செல்ல மாணவிகள் மாணவர்கள் கூட்டம்

“வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்” தடைசெய் தடைசெய் பிட்டா வை தடைசெய்” அங்காங்கே அணி அணியாக அமர்ந்து போராட்டம் நடக்கிறது எனக்கு வேலைக்கு செல்லும் சூழல் எப்படியும் இன்று மாலை காவல்துறை களைத்துவிடும் என்ற சிந்தனையில் இடத்தை விட்டு சென்றுவிட்டேன் மாலை வேலைமுடித்துவிட்டு லைட் ஹவுஸ் வந்தேன் காலையில் பார்த்ததை விட அதிக கூட்டம் கடற்கரை மணல்மேடுகள் மறைந்தன நேரம் போக போக வந்துகொண்டே இருக்கும் அந்த கூட்டத்தை நான் ஆங்கில புது வருட இரவில்பார்த்து இருக்கிறேன் அதைவிட அதிகம் இரவு செல்கிறது அங்காங்கே இளைஞர்கள் சகோதிரிகள் இரவுபணியிலும் போராட்டம் தொடர்கிறது சக தோழர்கள் வரும் வாகனங்களுக்கு மக்கள் பாதை மாறுவதற்குசரியாக வழி காட்டினர் அங்காங்கே கிடக்கும் குப்பைகள் பேப்பர் ஒர் பையில் எடுத்துக்கொண்டு இருந்தனர்..

மறுநாள் காலை விவேகானந்தர் மண்டபம் சூழ்ந்து காந்தி சிலை அந்த பக்கம் கண்ணகியும் மறைக்கும் கூட்டம் நான் அங்கே அமர்ந்து இருக்கிறேன் டீ காபி பிஸ்கட் தின்பண்டங்கள் இட்லி புரோட்டா தண்ணீர் பாட்டீல்என்று போதும் போதும் என்ற அளவிற்கு வந்துகொண்டே இருக்கிறது யார் கொடுக்கிறார்கள் எங்கே இருந்துவருகிறது தெரியாது யார் தலைமையில் நாம் செயல்பபடுகிறோம் என்றே கேள்விக்கு பதில் தேடாமல் தமிழர்என்ற ஒற்றுமையில் இணைந்துள்ளோம் 4ஆம் நாட்களை கடந்து சென்றுக்கொண்டு இருக்கிறது ஜல்லிக்கட்டுஆதரவாக குடும்ப பெண்கள் அதையும் தாண்டி நான் பார்த்த கர்பிணி பெண்கள் இரவு 10மணி நான் அமர்ந்துஇருக்கிறேன் என் அருகில் நின்றுகொண்டு பார்க்கும் அப்பா அம்மா அவரின் மகள் எந்தவொரு தயக்கமின்றிமகளிடம் நீ இருந்துவிட்டு வா மா!

நாங்கள் செல்கிறோம் என்று அப்பாவும் அம்மாவும் செல்கிறார்கள் அந்ததருணம் இளைஞர்கள் மேல் இருக்கும் நம்பிக்கையை காட்டியது இரவு 1மணி இருக்கும் நண்பர் ரசீம்தொலைப்பேசியில் தொடர்புக்கொள்கிறார் 30பேருக்கு சாப்பிடுகிற மாதிரி பிரியாணி இருக்கு நான்மெரினாவிற்கு வருகிறேன் என்று .. நாங்கள் சாப்பாட்டை தரும்போதும் சரி நான் போராட்டத்தில் அமர்ந்து இருக்கும்போதும் சரி என் அருகில் அமர்ந்தார்கள் யாருமே தனக்கு என்று சேகரிக்காமல் வந்த சாப்பாட்டை தண்ணீரை அருகில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் பண்பை பார்த்தேன் 7ஆம் நாள் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது அந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டையும் தாண்டி மீத்தேன் தனிநாடு பிரச்சனைகள் கோசங்கள் எழுப்பபட்டது சில

கருப்பு சட்டை இயக்கம் குடியரசுதினம் கருப்பு தினம் என்று பதாகை எந்தி போராடுகிறார்கள் இத்தனை நாள் போராடியது தமிழகத்திற்கு வெற்றி என்று இருந்தேன் நாளை காலை 10மணிக்கு தீர்ப்பு வரப்போகிறது இன்று மாலை 5மணிக்கு என் தங்குமிடத்திற்கு வந்தேன் செய்திகள் வந்தவண்ணம் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடர்கிறது.,

கல்லுரி மாணவர்கள் மாணவிகள் இளைஞர்கள் பெற்றோர்கள் கைக்குழந்தை கர்பிணி பெண்கள் ஒன்றாக இருந்தோம் விடிய விடிய ஆடல் பாடல் கரகாட்டம் ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு அழகாக சென்றுக்கொண்டு இருக்கிறது நாளை நல்ல தீர்ப்பை எதிர்பார்த்து

இரவு செய்தி வருகிறது RJ பாலாஜி இசை அமைப்பாளர் ஆதி நடிகர் லாரன்ஸ் போராட்டத்தை கை விடுமாறு , சில குழப்பங்கள் நன்றாக சென்ற குடும்ப போராட்டம் எனக்கு மனம் சரியில்லை இரவு வீடு திரும்பினேன்

மறுநாள் காலை மெரினா கடற்கரை பாதைகள் அடைக்கப்படுகிறது ஆர் கே சாலை, நடுக்குப்பம், திருவல்லிக்கேணி சாலைகள் என்னால் உள்ளே செல்ல முடியவில்லை திரும்பி வந்தேன் தொலைக்காட்சிசெய்திகள் போராட்டகளத்தில் காவல்துறையினர் மக்களை களைந்துசெல்ல அடிக்கின்றனர்.. போராட்டம்வன்முறையாக மாற்றப்படுகிறது அமைதியாக போராட்டம் சீர்குலைக்கபடுகிறது சென்னை மாநகரம் பதற்றத்தில் உள்ளது நான் இருந்த பகுதி மீனவர்கள் குப்பம் தீ வைக்கப்பட்டது காவல் நிலையம் அருகில் இருந்த வாகனங்கள் தீ புகையினால் மாறியது என்ன நடக்கிறது போராட்டம் கடைசியில் இப்படி மாறிவிட்டதே என்ற மனவருத்தம்

நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்தது தமிழகமே மகிழ்ச்சியில் காலம் கடந்து நடைப்பெற்று வரும் வீரவிளையாட்டு தமிழர்களின் ஒற்றுமையில் கிடைத்திருக்கிறது பல தடங்கள் பல போராட்டம் மத்திய அரசைஎதிர்த்து மாநில அரசை எதிர்த்து 50வருடங்களுக்கு பிறகு இளைஞர்கள் நடத்திய போராட்டம் வெற்றிபெற்றதுநானும் அதில் பங்குபெற்றது என் வாழ்நாளில் அழிக்க முடியாத வரலாறு தமிழினம் போற்றி தமிழனாக தமிழ்க்குஎன்றும் குரல் கொடுப்பேன்.,
-தமிழன் நவாசுதீன்,

அவளுடன் ஒருநாள்

என் தொலைப்பேசிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு அவளிடமிருந்து அழைப்பு வந்தது.. எடுத்ததும் எப்படி இருக்க நல்லா இருக்கியா லைஃப் எப்படி போகிறது கேட்டதும் உன்னை இன்று மாலை சந்திக்கலாமா என்றாள் நானும் அவளை காணும் ஆவல் உடனே அந்த உணவகத்திற்கு மதியம் 2 மணிக்கு பார்க்கலாம் என்றேன்.. சரி நான் அந்த உணவகத்தில் முன்பதிவு செய்கிறேன் உன்னிடம் பேச ஒர் விசயமாக வருகிறேன் என்று தொலைபேசியை துண்டித்தாள்..

அவளை எனக்கு சில காலமாக தெரியும் நல்ல பெண் பிடித்தமானவள் அன்பாக என்னிடம் நடந்துக்கொள்வாள் நான் 1மணிக்கு வந்தடைந்தேன் மனதுக்குள் சில கேள்விகள் பல கனவுகள் என்ன சொல்ல போகிறாள் என்று! 1.50க்கு வந்தாள் அவளை பார்த்தேன் எதிரே அமர்ந்தாள் காந்தத்தின் கண்கள் என்னை ஈர்த்தது ஏதோ என்னிடம் பேசுகிறாள் அவளின் உதடுகள் அசைவுகள் மட்டுமே அறிய முடிகிறது அத்தனை பேரழகு சில நிமிடம் என்னை மறந்தேன் அவளை இதற்கு முன் பார்த்து இருக்கிறேன்.. இன்று நான் பார்த்தது எனக்குள் மாற்றங்கள்..

சிறுவயதில் ஒர் கனவு அதில் அழகிய உருவம் வரும் அவளை எதிரே பார்க்கின்றேன் கண்ணை முடியபோது அந்த கனவில் வருபவளும் எதிரே இருப்பவள் முகங்கள் ஒன்றிணைந்தன.. மனதில் புன்னகையுடன் பேசினேன்.. கடந்தகால நிகழ்வுகளை பகிர்ந்துக்கொண்டோம்.. எனக்கு திருமணம் நடக்கப்போகிறது என்று அவள் சொன்னதும் உமிழ்நீர் தொண்டையை கடக்க சில நிமிடம் எடுத்துக்கொண்டு என்ன சொல்கிறாய் என்ன அவசரம்! என்று பதற்றத்துடன் கேட்டேன் ஏன்! உனக்கேன்ன என் திருமணம், விட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றாள்! சொல்ல வார்த்தையில்லை இருந்து தயக்கத்துடனே இதை சொல்லத்தான் என்னை பார்க்க வந்தாயா ? வேற என்ன எதிர்பார்த்தாய்! இல்லை ஒன்றுமில்லை

நீ சொல்லு நான் எதற்கு வந்தேன் என்று கேட்டால் எனக்கு பதில்கிடைக்கவில்லை சிலநிமிடம் அமைதியாய் இருந்தோம் என்னை அவள்கவனித்தால் அவள் பார்வை என்னை நோக்கியது என் கண்கள் தடுமாறின.,


என்னை உனக்கு எத்தனை வருடங்களாக தெரியும் என்றாள் 5வருடங்களாக என்றேன்!, என் கேரக்டர் எப்படி ? கேட்டவாரே? எனக்கு என்னலாம் பிடிக்கும் என்று தெரிந்து கொண்ட அவள் பிடிச்சதெல்லாம் சொல்லு என்றாள் நானும் சொல்லிக்கொண்டு இருக்கும்போது என்னை பிடிக்குமா என்னை திருமணம்செய்வாயா! நான் உன் மீது காதல் செய்கிறேன் என்றாள்.


அமைதியானேன் இதயம் ஒரு நிமிடம் நின்றது ஆழ்மனதில் அலைகடந்த மகிழ்ச்சி சொல்ல முடியவில்லை

அவள் பதில்காக காத்திருந்தால் எனக்கு நேரம் கொடு நான் நாளைசொல்கிறேன் என்று விடைப்பெற்றேன்..