அவளும் அன்பும்

பல வருடம் கழித்து அவளும் நானும் சந்தித்து பேசுகின்ற சூழல், எப்படி இருக்க ! என்றுதொடங்கியது உரையாடல், 15 வருடம் முன் நடந்த நினைவுகள் கண் முன் வந்துபோயின ! அது ஆழ் மனதின் மறக்க முடியாத வடுகள் ,

எனக்கு அம்மாவும் மாமாவும் தான், கோயம்புத்தூரில் வேலை, பொண்ணு பார்க்க போறோம் என்று அம்மா என்னிடம் வெள்ளிக்கிழமை அலுவலக வேலை விடுப்பு எடுத்து வர சொன்னாங்க.

வெள்ளிக்கிழமை அவளை பார்க்கிறேன் ! அவள் அழகு ! காபி கொடுத்ததும் அம்மாவை பார்த்தேன், அம்மா பெண்ணை பிடித்திருக்கு என்றார்கள், அவளுடன் நான் பேசனும் என்றேன் மாடியில்இளஞ்சிவப்பு மாலை நேரம் ஒருவித தயக்கதுடன் நீங்க சொல்லவே இல்ல என்னை பிடிச்சிருக்கா என்றேன் பிடிக்கலனா தலையை அசைத்துவிட்டு போயிருப்பேன், இப்படி நின்றுபேசியிருக்கமாட்டேன் ! அவள் சொல்லும் அழகை கேட்கும் போது தென்றல் காற்று வீசியது போல ! உணர்ந்தேன்

பிறகு அம்மா வர சொன்னாங்க கிளம்பிட்டோம், அங்கே அம்மாவிடம் அவங்க வீட்ல என்னபேசுனாங்கனு எனக்கு எதும் தெரியல, அம்மாவும் அதைப்பற்றி என்னிடன் பேசல, எனக்கு அவளை எப்பலாம் பார்க்கனும் தோணுதோ அப்போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் சந்தித்துக்கொண்டோம், நல்ல பழக்கம் பேசி புரிந்துக்கொண்டோம், அந்த நேரம் என்னிடம் கைப்பேசி இல்லை , அவளை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது அவளும் இதுபோல என்னிடம் நிறையநேரம் சொல்லி இருக்காள் !

ஆனால் அம்மா என் கல்யாணத்தை பற்றி பேசமாற்றாங்கனு தெரிலனு மாமாவிடம் கேட்டேன் அவங்க குடும்பம் எங்க சாதியை பற்றி கேட்டு இருங்காங்க, அம்மா என்னிடம் இதுவரை சொன்னதில்லை அம்மாவும் அப்பாவும் கலப்பு திருமணம் ! சாதி என்றால் என்னவென்றே தெரியாமல் தான் வளர்த்தாங்க , ஆனால் அது மற்றவர்களுக்கு சுயசாதி பெருமை, சாதி ஏற்ற தாழ்வு சாதியப்பற்று எவ்வளவு ஊறி போயிருக்கு என்ற அன்று தான் தெரிந்தது , பிறகுநானும் அவளும் சந்திப்பது தெரிந்ததும், பிரச்சனை அதிகமாயின ! சாதிய சீண்டல்கள் , அவமானம்படுத்துனாங்க !

யாருக்கும் தெரியாமல் ஒரு நாள் அவளை சந்தித்தேன், என் கூட வந்துவிடுகிறேன் என்றாள், அப்பா விட்ல எல்லாரும் ஒருவிதமா சொல்லிக் காட்டுறாங்க, வெறும் பொண்ணு பார்க்க வந்தது தானேனு ! ஆனால் நான் உன்னை விரும்பி தான் நேசிக்கிறேன், என்னை அழைச்சிட்டு போஎன்றாள் , எனக்கு ஒருநாள் டைம் கொடு நான் வீட்டில் வந்து பேசுகிறேன் என்றேன். அடுத்த நாள் அவள் அப்பாவை சந்தித்தேன் , அன்று இரவே என் அம்மாவை மிரட்டிட்டு போனாங்க,

என்னையும்அன்று இரவு சில ரவுடிகளை விட்டு அடித்தார்கள் , இன்றும் அந்த தழும்பு இருக்கு அன்று இரவே என்வீட்டிற்கு அவள் வந்தாள் யாருக்கும் தெரியாமல், அம்மா தான் நீங்க எங்கையாவது போய் பொழச்சிக்கோங்கனு அனுப்புனாங்க ! அம்மாவை விட்டு போக மனசு இல்லை , மாமா தான் நீ போ ! நான் பார்த்துகிறேன் என்றார். இரவு பேருந்து ஏறுவதற்குள் மாமாவை கொண்ணுட்டாங்க ! அம்மா மருத்துவமனையில் இருக்காங்க என்று தெரிந்ததும் அவள் ஒரு வார்த்தை சொன்னா நீ முதலில் அம்மாவை காப்பாற்று என்று ! அழைத்துக் கொண்டு போவதற்குள் என்னையும் அடிச்சி அவளைஅழைச்சிட்டு போயிட்டாங்க ! நானும் அம்மாவும், மாமாவை பறிகொடுத்த வருத்ததில் காயத்துடன் மருத்துவமனையில் , அடுத்த நாள் அவளின் அம்மா வை கொண்ணுட்டாங்க சுயசாதி பெருமைகொண்டவர்கள் ! என்ன நடக்கிறது தெரியவில்லை என்னால் உடலில் காயங்களுடன்நகரமுடியவில்லை, அடுத்த வாரம் அவங்க அப்பா என்னை வந்து பார்த்தார்

கண்ணீருடன் உன்னால்தான் என் மனைவியை இழந்திருக்கிறேன், மானம் போய், மரியாதை போய் , என் பொண்டாட்டியை கொண்ணுட்டியே என்னை பார்த்து கேட்கும் போது நான் அதை செய்யவில்லை, எழு மாதம் கழித்துதான் என் குடும்பத்தை காட்டி சாதி அரசியல், சாதிய சண்டை நடத்திருப்பது தெரியவந்தது, அவளை சமாதான படுத்த சென்றேன்.

என்னை பிடிக்காதவாறு, உன்னை அன்று உங்க அம்மாவை தான்பார்க்க சொன்னேன் , என் அம்மா வை கொண்ணுட்டியே ? நான் புரிய வைக்க அவள் மனசு முயற்சிக்கவில்லை ! எங்கே அவள் தனது அப்பாவை இழந்துவிடுவாளோ என்ற பதற்றம் தான். உன்னால் இழந்தது போதும் கடைசி வரை என்னை மாற்ற முயற்சிக்காதே சென்றுவிட்டாள்,

நாங்கள் ஒன்னு சேரல 15 வருசம் ஓடிவிட்டது அவளுக்கும் கல்யாணமாகி குழந்தை இருக்கு ! எனக்கும் பையன் இருக்கான் !

இப்பலாம் யாரு சாதி பார்க்கிறார்கள் என்ற கேள்வி நேரத்தில் ஆணவக்கொலை, சாதிய கொலை, சாதிய வேறுபாடு , சாதிய தீண்டாமை நடந்துகிட்டு தான் இருக்கு , நடக்காதவங்களுக்கு அதுவெறும் செய்தி , என்னோட வாழ்க்கை மாறினாலும் இழப்பு, காதல் தொலைத்துவிட்டது., நீங்கள் நினைக்கலாம் எங்க அம்மா அன்னைக்கு பார்த்து கேட்டு போயிருக்கலாம் என்று ! அப்படி நீங்க நினைக்கிற வரை அந்த தீ ஒவ்வோரு உயிரையும் மனிதனையும் காயப்படுத்தும் கொண்றுவிடும் , நாங்க பண்ணது தப்பில்லை இந்த சமூகம் செய்தது தான் தவறு!

நம்மால் இன்னும் மாற்றமுடியவில்லை கோபமும் ஆத்திரமும். இன்னும் காமராஜர், முத்துராமலிங்கம்வஊசி போன்ற தலைவ‌ர்க‌ளை பொது தலைவராக பார்ப்பதில்லை. அவர்களை ஒர் சமூகத்திற்குள்அடைப்பது தான் கவலை

பிரிந்தது நானும் அவளும் மட்டுமில்லை அவளுடைய அன்பும் தான் ஏதோ ஓர் இடத்தில் வாழ்ந்துட்டுஇருக்கும் எங்களின் காதல்.