குப்பை

சராசரி மனிதர்கள் மூலம் கொட்டப்படும் குப்பை கழிவுகள் அதை கொட்டும்போது நாம் சிந்தித்ததுண்டா ! அள்ளுபவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான் என்று ?

நான் உணவகத்தில் மேலாளராக பணியாற்றியபோது பொறுப்புகள் என் கீழ் கொடுக்கப்பட்டது ஒருநாள் கழிவறை அடைப்பு எற்பட்டது நானும் அடைப்பு எடுப்பவரை வரவழைத்து அதனை சரிசெய்த. நான் நேரில் பார்த்த அவலம் கழிவுகளை கைகளால் எடுத்தார்கள் . ஏன் சாதனங்கள் எதுவுமில்லையா என்றேன் அதெல்லாம் இல்லை என்ற பதில் வந்தது.. எனக்கு கொடுக்கப்பட்ட 600 ரூபாயில் வேலையை முடிக்கவேண்டும், ஆனால் அவர் கேட்ட 1000 ரூபாயை என்னால் வாங்கி கொடுக்கமுடியவில்லை என்பது எனக்கு மிகவும் வேதனையளித்தது. அவர் உழைப்பிற்கு சரியான ஊதியம் கிடைக்கவில்லையே

உண்மையில் அந்த செயலை யாராலும் செய்ய முடியாது துப்புரவுதொழிலாளர்கள் மீது என் பார்வையை செலுத்த தொடங்கினேன் அவர்கள் நடவடிக்கைகளை கவனித்தேன்.. வேதனை மிகுந்த தொழில். நான் வேலைக்கு செல்லும் வழியில் குப்பை அள்ளும் ஒருவரை தினமும் பார்ப்பேன் அவரும் என்னை பார்த்து சிறிது புன்னகைப்பார், அவருடன் பேச முற்பட்டேன் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது கடையில் பொருள் வாங்குபோது, அந்த சந்திப்பின் போது அவரிடம் பேச்சுக்கொடுத்தேன் அவரையும் அவரது தொழிலையும் பற்றி சொன்னார் மிகவும் ஆபத்தான ஒன்று!!

நம்ம மக்கள் எங்க சார் எங்களை சமநிலையோடு பார்க்கிறார்கள் !? குப்பையோட குப்பையாகதான் பார்க்கிறார்கள் உங்களை மாதிரி தானே நாங்களும் கைகளால் சாப்பிடுகிறோம் உங்க மலத்தை நீங்க தொடுவிங்களா சார்! எப்படி சார் நாங்க பணத்துக்காக தொடுவோம் என்று நினைக்கிறார்கள்.. ரோட்டில் நாய் எலி இறந்துகிடக்கும் நீங்க மூக்கை மூடிகிட்டு போயிடுவிங்க நாங்கதான் எடுக்கனும்!. அரசாங்கம் மேல குறை இருக்கு அதற்காக குறை சொல்லவேண்டாம் நம்ம மக்களும் சரியா நடந்துக்கனும்.

இங்க எத்தனை பேர் குப்பை கழிவுகளை குப்பை தொட்டில் போடுறாங்க பொதுஇடத்தில் எச்சில் துப்பாதீர்கள் சிறுநீர் கழிக்காதே! இந்த வாக்கியத்தை நம்ம கடைபிடிச்சிருக்கோமா இன்னும் காலனி அணியாமல் எத்தனையோ மக்கள் நடந்துபோகிறார்கள். இதை சொல்கிறதை விட நாம் உணரனும்..

என் பொண்ணுக்கு 10வயசு நான் வேலை முடிச்சிட்டு வந்தா என்னை பார்க்க ஆசையா ஓடிவருவாள் என்னால் நெருங்க முடியாது எங்க என் சாக்கடை நாற்றம் , ஏதாவது நோய் வந்துடுமோனு பயம் சார் மனைவி பார்க்கிற பார்வை சொல்ல முடியாத வலி..

இப்ப கூட இந்த தொழில் விட்டுட்டு வேற தொழில் செய்யுங்கள் நீங்கள் என்று நினைப்பவர்களும் சொல்பவர்களும் ஏராளம் உங்களை மாதிரி மூக்கை பொத்திகிட்டு போக மனசு வரவில்லை சார்

சுகாதாரம் சுத்தம் நம்மில் இருந்து தொடங்கப்படும் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மாற்றத்தை நம்மிடமிருந்து தொடருவோம்

நன்றி 

நவாசுதீன்

தனிமை

நம் மனநிலையில் வெளிப்பாடு தனிமை இது நம்மை தேவையில்லா சிந்தனை கொண்டு போகும், சோகங்கள் வலி நினைவிற்கு வரும்.. நமக்கு பிடித்தமானவர் நம்மை வெறுக்கும்போது நம்மை சார்ந்தவர்கள் நம்மை ஒதுக்கும்போது அதை உணர்வோம், 100 பேர் அமர்ந்திருக்கும் பொது இடத்தில் நம் சிந்தனையும் நாமும் எங்கோ சென்றுக்கொண்டு இருக்கும்..

நம் குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் தனிமை வாழ்வு அழுகை காயங்கள் ஒருபோதும் சொல்லமுடியாத வலி. பெற்றோர் பிள்ளைகளை பிரிந்து வாழும்.
ஆதரவற்றோர் தனிமை. பெண்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும்போது, விருப்பமானவற்றை நிறைவேற்றாதபோது இதை எழுத்துக்களில் உணரவைப்பது கடினம்.. கணவரை பிரிந்த மனைவின் தனிமை , வயது 60தை நெருங்கியிருக்கும் நம்
துணைவியார் நம்மை விட்டு சென்றுயிருப்பார் நம் சந்ததினர் நம்மை ஒர் மூலையில் இடம் கொடுத்திர்பார்கள்  நம்முடைய பசி தூக்கம் உடல் வலி வேதனை கேட்க நாதியில்லாமல் இருப்போம்.. தனிமையை கண்ணீரில் உணர்வோம்..

தனிமைக்கு பாலினமில்லை இது அனைவரின் உள்மனதில் படிந்திருக்கும் சிந்தனை அதை உணரும்போது உன் ஆழ்மனதில் குரல் மட்டுமே ஒலிக்கும் நாம் எதையெல்லாம் தனிமையில் ரசிக்கின்றோமோ உன்னிடம் பேச முயற்சிக்கும் கடற்கரை அலைகள், தனி அறையின் சுவரும், பேருந்தில் ஜன்னல் வழியாக பேசும் .. எப்போதும் ஒருவனால் தனது மனதை ஒரே மாதிரியான கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாது தனிமை அவனை சூழ்ந்துக்கொள்ளும் சங்கிலியில் கட்டப்பட்ட மனிதன்போல்

நம் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வோம், நம்மை தனிமையிடமிருந்து வெளிக்கொண்டு வர முயற்சிப்போம்.. வாழ்வில் இதை நாம் கண்டிபாக சுவைப்போம் அதை நாம் விஷமாக மாற்றிடாமல் நல்ல நினைவுகளாக வரைவோம் தனிமையின் வலி யாருக்கும் வேண்டாம் அனைவரிடமும் சகஜமாக பேசுவோம்..,

நன்றி

எழுத்து நவாசுதீன்

அந்த 40 ரூபாய்

அந்த 40 ரூபாய்க்கு பதில் கிடைக்க 5 வருடம் எடுத்துக்கொண்டேன், ஆம் பள்ளி முடித்துகல்லூரி வயது! அந்தகடை முதலாளி எனக்கு பல வருடங்களாக பழக்கம்.. உழைப்பால்உயர்ந்தவர் பல நாட்கள் அவர் கடையில் நானும் உதவிக்காக பொருட்களை எடுத்துவைப்பதும் வரும் வாடிக்கையாளர்களை கவனிப்பேன். 

அப்படி ஒருநாள் கடையில் நிற்கும்போது பொருள் விற்றபணம் 40 ரூபாயைமறந்து வைத்துவிட்டார்.. 

வைத்த இடம் மறந்து 30நிமிடமாவது தேடியிருப்போம் கிடைக்கவில்லை.. 

என் மனதோ அவர் ஏன் 40 ரூபாய்க்கு இப்படி தேடுகிறார், அவர் நான் எது கேட்டாலும்தயக்கமே இல்லாமல் பணம் கொடுப்பார், யாருக்கும் உதவி என்றால் தயக்கமின்றி பணஉதவிச்செய்வார் அப்படி உள்ளவர் முகம் இன்று மாறிவிட்டது, நீண்ட நேரம் எதோ அவர்மனதில் அதையே நினைக்க, 

நான் வைத்து இருக்கும் பணத்தை கொடுத்தாவது அவர் மனதை சந்தோஷப்படும் என்றுஎண்ணினேன். என்ன வாப்பா. ரொம்ப இதை நினைக்காதீங்க சொன்னதும். ‘இல்லை அதுஉழைத்தகாசு தம்பி நாம கொடுத்த காசு எற்றுக்கொள்ளலாம் நமக்கு இறைவனாகஉழைத்ததிற்கு கொடுத்ததை தவறவிட்டுவிட்டேன்., சரி என்று விட்டுவிட்டேன்., அன்றுதெரியாத உழைப்பு இன்று நான் வேலையில் சம்பாதிக்கும் போது அந்த 40 ரூபாயின்மதிப்பு தெரிகிறது., பணத்திலில்லை உழைக்கும் வியர்வையி்ல் உள்ளது.! 

அந்த 40ரூபாய் எனக்கு உழைப்பை உணர்த்தியது, 40ரூபாய் தானே உங்களுக்கும்தோன்றினால் எனக்கு கிடைத்த விடை உங்களுக்கு கிடைக்கும்போது நீங்கள்உழைத்துக்கொண்டு இருப்பீர்

நன்றி 

நவாசுதீன்  பாடம் 

என் காதல் திருமணம்

திருமண வயது நெருங்கிவிட்டது.. வீட்டில் அனைவரும் பெண் பார்க்க முடிவு செய்தார்கள் என்ன செய்வது அம்மா கேட்டதுமே என்னால் தலையை மட்டுமே அசைக்க முடிந்தது “அமைதி சம்மதம் என்று எடுத்துக்கொண்டனர். பெண்கள் மட்டுமல்ல சில ஆண் களாலும் வீட்டை எதிர்த்து பேசமுடியாத சூழல்..

இது பயமில்லை சிறு வயதில் இருந்து நம்மை வளர்த்த பாசம் அன்பு, நான் காயப்பட்டாலும் பெற்றவர்கள் காயப்படக்கூடாது நோக்கம்.. பலநாட்கள் காதல் தோல்வியற்றதை நினைத்து அழுது இருக்கிறேன்.. ஆண்களின் கண்ணீர் உண்மையானது வெளியில் காட்டிக்கொள்ளாமல் பலநாள் தனிமையில் இருந்த வலி.. நான் அவளிடம் தோற்றாலும் என்றுமே காதலில் தோற்றதில்லை..

மறக்கமுடியாத நினைவுகள் நினைத்து என்றுமே கண்ணீர் மூலமே வெளிக்கொண்டு காலத்தை நகர்த்துகிறேன் என்ன செய்வது ! வருபவளிடம் எப்படி நடந்துக்கொள்ளவது ? நினைவுகளை எப்படி மறப்பது ? தனி மனிதனாக பல கேள்விகள் வருபவளிடம் சொல்லிவிடலாமா அது அவளை காயப்படுத்திவிட்டாள் என் சோகம் என்னோடு போகட்டும் ஆனால் எத்தனை நாள் மறைப்பது நானும் நினைவுகளை அழிக்க 3 வருடங்கள் எடுத்துக்கொண்டேன் இருந்தும் அழிக்கமுடியவில்லை..

திருமண நாள் நெருங்கியது வீட்டில் அனைவரும் சந்தோஷத்தில். என் கண்கள் காட்டிக்கொடுத்து விடுமோ என்ற பயம்..

நான் அவளிடம் உன்னை விட யாரையும் நேசிக்கமாட்டேன் என்று பலமுறை கூறியிருக்கிறேன் .. வருபவள் பல கனவுகளோடு வருவாள் இப்போது யாரை எமாற்றுகிறேன் ?? பல ஆண்களின் நிலைமை வாழ்க்கையின் போராட்டத்தில் இதுவு‌ம் ஓன்று.. காதலியை போல மனைவியை நேசியுங்கள் என் காதல் / திருமணம்

எழுத்து நவாசுதீன்

மகாராணி

ஏங்கே செல்வது தெரியவில்லை ! இரவு 1 மணி இந்த கைகுழந்தை இரவோடு இரவாக அனாதை அசிரமத்தில் வச்சிட்டு வந்திடலாம்.. நான்தான் பெண்ணாக பிறந்து எல்லாருக்கும் கஷ்டம்.. நீயும் ஏன் மா ! என் மகளா பிறந்த.. நம்மல இங்க வாழ விடமாட்டாங்க.. உன்னை எங்கயாவது விட்டு விட்டு என் வாழ்க்கையை முடிச்சிகலாம் இருக்க… 

எனக்கு பிடிச்ச வாழ்க்கை வாழனும் தான் ஆசை என்ன பண்றது பெண்ணா பிறந்து விட்டேன்… பிறந்த வீட்டை விட்டு புகூர்ந்த விட்டுக்கு எல்லாரும் மாதிரி நல்ல எதிர்பார்ப்புடன் வாழ்க்கை அமைக்க போனேன்.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளை. காதல் எனக்கு இஷ்டம் இல்லை.. நல்ல பையன் எனக்கு  பிடிச்சி இருந்தது.. நானும் b.sc வரை படிச்சவதான்.. எல்லாரையும் என் குடும்பமா பார்த்துகனும் ஆசையோட போனேன்… என் கணவர் ஓர் பெண்ணை காதலிச்சிருக்காரு அது தோல்வி முடிச்சதும் சில சமயம் குடிப்பாரு… நானும் போக போக சரிப்பண்ணிடலாம் நினைத்தேன்.. அவருக்கு பிடித்த மாதிரி நடந்துகிட்டேன்.. என்னை மனசார எற்றுக்கொள்ளவில்லை.. ஆறு மாதத்தில் நான் கருவுற்றேன்.. அதில் இருந்து என் மாமியார்க்கு ஆண் குழந்தை பிறக்கனும் என்ன பார்த்து பார்த்து கவனிச்சிகிட்டாங்க.. ஆண் குழந்தை தான் குடும்பத்தோட வாரிசு நீ ஆண் குழந்தை தான் பெற்றுக்கொடுக்கனும் ஒரு ஒரு முறை சொல்லும்போது  பல நாட்கள் தூங்காத இரவாக விழித்திருக்கிறேன்.. 

ஏழாம் மாதம் சடங்கு செய்யனும் என் மாமனார் சீர் வரிசையாக மாப்பிள்ளைக்கு கார் கேட்டார்.. என் அப்பா அதை வாங்கி கொடுக்கமுடியாத சூழல்.. அதில் இருந்து மாமனாருக்கு என்னையும் என் குடும்பத்தையும் கண்டா பிடிக்கிறது இல்லை.. கஷ்டம் வந்தாலும் பிள்ளைய நல்லபடியா பெற்றுக்கொடுக்கனும்..

ஒன்பதாம் மாதம் அம்மா வீட்லதான் இருந்த வறுமையிருந்தாலும் நல்லா கவனிச்சிகிட்டாங்க.. அப்பா க்கு ஹாட் ஆபரேஷன் செய்யனும்.. எனக்கு கடுமையான வயிற்றுவலி மருத்துவமனையில் அனுமதித்தாங்க.. குழந்தை ஆபரேஷன் செய்துதான் எடுக்கனும் செலவாகும் என்றதும்.. முதல் குழந்தை தாய் வீட்டில் தான் செலவு செய்யனும் சொல்லிட்டாங்க.. எங்க அம்மா , அப்பா ஆபரேஷன் க்கு வைத்து இருந்த பணம் நகை வைத்து ஆபரேஷனில் பெண்குழந்தை பிறந்தது.. 

என் மாமியார் என்னை எற்றுக்கொள்ளவில்லை என் கணவரும் அம்மா பேச்ச கேட்டு என்ன எங்கையாவது தொலைந்து போ.. சொல்லிட்டாங்க அவங்க வீட்டுக்குப் போய்டாங்க.. என் வீட்டுக்கு போக மனமில்லை என்ன பண்றது தெரியவில்லை.. குழந்தை எடுத்துட்டு வந்துட்ட…


இப்படிக்கு மகாராணி

கனவு தேவதை

ஞாயிறுகாலை 7மணி எப்பவும் போல பல்தேய்துக்கொண்டேகண்ணாடிபார்த்தேன். தீடிர்மாற்றம் பயந்துவிட்டேன். ஆம்கண்ணாடியில் நான் பெண்ணாகமாறியது போல் தோற்றம். எனக்குஎன்ன செய்வது என்றுதெரியவில்லை குழப்பம் எதனால் மாறினேன்.. ? 

என் மனதுக்குள் ஓர் பேசும் குரல் நீஇன்று ஒருநாள் பெண்ணாகமற்றவர்களுக்கு தெரிவாய்.. இன்று எப்பொழுதும் செய்யும் வேலைகளை செய். ஏங்குவேண்டுமானாலும் செல். ஆனால் அறையில் உட்காரக்கூடாது மீறி வெளியில் செல்லாமல் இருந்தால் இனிகாலம்முழுக்க பெண்ணாக மாறிவிடுவாய்.. கண்களில் இருந்து கண்ணீர் அழுகை யாரிடம் சொல்வது நேரம் ஆக ஆக என்னை நானேமனதைரியத்தை வரவழைத்துக்கொண்டு என்னிடம் இருந்த பேண்ட் சர்ட் அணிந்துக்கொண்டு வெளியில் புறப்பட்டேன்.. இத்தனை நாள்என்னை யாரும் கவனித்ததாக தெரியவில்லை அன்று என்னைஎல்லாரும் நோட்டம் விட்டார்கள்.. தயங்கி தயங்கியே சென்றேன்.. “இந்தமா ஆம்பல மாதிரியா சட்டை ,பேண்ட் போடுவ ஒர்குரல்.. ‘என் நான் பையன் மாதிரி போடக்கூடாதா’  என்னாம்மா படிச்ச திமிறு பொம்பளபுள்ளையா நடந்துக்க… யார் இவங்க என் விரும்பமான சட்டைபோட்டா திட்டுறாங்க.. மனதில் முனுமுனுத்துக்கொண்டே நகர்ந்தேன்.. 

நான் ரோட்டு கடையோரம் சாப்பிட ஹோட்டல் சென்றேன், மறுப்படியும் சுற்றியுள்ளவர்கள் ஏதோ பெண்களை பார்க்காத மாதிரி பார்த்தார்கள்..

ஏன் அண்ணா எல்லாரும் அப்படி பார்க்குறாங்க கேட்டதற்கு..

இல்லம்மா இங்கலாம் பொண்ணுங்க சாப்பிடமாட்டாங்க நீ வந்துஇருக்க”- எனக்கு என்ன சொல்வது தெரில..  சரி சரி 2 இட்லி வைங்க..

பேருந்தில் ஏறினேன் பெண்களுக்கு என்று தனி இடமிருந்தாலும் எப்பவும் போல் ஆண் இருக்கையில் அமர்ந்தேன்.. என் பக்கத்தில் ஒருத்தர் உட்கார்ந்தார் நானும் ஜன்னலொரமா என் மாற்றத்தை நினைத்து கவலையில் இருந்தேன் என் அருகில் உட்கார்ந்த ஆளு ரொம்ப நேரமாக வொரசிகிட்டே இருந்தார்.. கொஞ்சம் தள்ளி உட்காருங்க சொன்னேன் அதற்கு ஏம்மா ஆம்பல சீட்ல நீ உட்காந்துட்டு என்ன சொல்ற வந்துட்டா மீனா மினுக்கி.. எனக்கு யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை இறங்கிவிட்டேன்.  

நடந்து வரும் வழியில் ஓர் பெண் தயங்கி வாடியமுகத்தோடு நின்றுகொண்டிருந்தார் 

என்னம்மா  என்னாட்சி ?

இல்லஅக்கா ! அக்காவா சரி சொல்லு., நாங்க இங்க சுற்றுலா வந்தோம் நான் வழி மாறி வந்துட்டேன் எனக்கு ஏங்க போரதுனு தெரில.. நான் உதவி செய்யலாம்னு வா மா !நான் அழைச்சிட்டு போய்விடுகிறேன் அந்த பெண்ணிடம் போன்நம்பர் வாங்கி ஏங்க இருக்கிறார்கள் என்றுவிசாரித்து அவளை அழைத்து சென்றேன்..அவர்களாம் ரொம்ப தூரம் தாண்டி போய்டாங்க வா நான் உன்னை பஸ்ஸில் விடுகிறேன்.. பேருந்தும் கிடைத்தது என்னிடம் பேச்சிக் கொடுத்துக்கொண்டே வந்தாள், நானும் ஏங்கதங்கச்சி படிக்கிறிங்க கேட்டேன்,சிறு கண்ணீருடம்  இல்லை அக்கா நான் படிக்கவில்லை ஒரு பையன லவ்பண்ண என்னை ஏமாற்றிவிட்டான் விட்டை விட்டு  ஓடி வந்துவிட்டேன் இங்க ஆதர்வற்ற நிலைமையில் இருக்கும்போது ஓர் அனாதை அசிரமத்துல சேர்ந்து அங்க உள்ளவங்களை கவனித்துக்கொண்டு அப்படியே வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு..

ஓர் பெண்ணாக இருப்பது கடினம் கஷ்டம் கா ! வீட்ல ரொம்ப கன்டிசன் போடுறாங்கனு  ஒருத்தன நம்பி வந்த அவனும் என்னைவிட்டு விட்டு போய்டான் இங்க நம்மலாம் அவங்க சொல்கிறதை கேட்டுக்கிட்டு வாழனும் நமக்கு எந்த தனி சுகந்திரமும் இல்லை.. ஏன் மா அப்படி சொல்ற எத்தனையோ பேர் பெண்ணாக இருந்து சாதிக்களையா..

உண்மைதான் அக்கா ! ஆனா பெண்களாம் ஆண்களின் சமம் வெறும்பேச்சிக்கு தான்.. எங்க நம்ம டிரஸ் போட்டா கேலி கிண்டல் அசிங்கமா பார்க்கிறது நம்மல அப்படி இரு இது மாதிரி போடாத சொல்றாங்க.. ஒரு நாளும் பசங்க பார்க்கிர பார்வையில் தான் தப்புனு பேசமாட்டாங்க.. இன்று கூட பணிசுமை காரணாமாக  12மணிக்கு வெளியில் போன.. நம்ம வெளியில் செல்வதனால் தவறு நடக்குது சொல்றாங்க.. நம்ம கஷ்டம்லாம் அவங்களுக்கு எப்படி தெரியும்.. ஆண்களை ஒருநாள் பொம்பலையா மாத்திவிட்டு பார்க்கனும் அப்ப தெரியும் நம்ம வலி ஏன்னானு.. என் தலையில் யாரோ அடிச்ச மாதிரி இருந்தது.. புரிகிறது தங்கச்சி அதுக்குனு ஆண்களை குற்றம் சொல்வது தப்பு.. இல்ல அக்கா! நான் அவர்களை மட்டும் சொல்லவில்லை.  அவர்களுக்கு ஒர் உரிமை சுகந்திரம், கொடுக்கும் போது நமக்கு பிடித்ததை செய்ய அனுமதித்தால் என்ன?

 சரி அக்கா நன்றி நான் இறங்கும் இடம் வந்து விட்டது விடை பெற்றாள்…

நான் வீடு திரும்பினேன்  இரவு 9 மணி..  இன்னும் 3மணி நேரம் என்ன செய்வது என்று கடற்கரை சென்றேன் பல கண்கள் ஒர் பெண்காக என்னை பார்க்க இரவில் அந்த அமைதியான அலை பார்த்தவண்ணம் நடந்ததை நினைத்துக்கொண்டு இனியாருக்கும் எந்த தொந்தரவும் செய்யகூடாது.. பெண்ணாக நடந்துக்கிறது ரொம்ப தைரியம் வேணும்.. பள்ளி வயதுப்பருவம்,  காதல்,  திருமணம்,  வரதட்சணை,  தாய்மை,  சகிப்புத்தன்மை,  பாதுகாப்பு   எதிர்க்கொள்ளும் உடல்ரீதியான பிரச்சினைகள் தாண்டி வாழனும்.. போன் ரீங் அடித்தது கண்ணை திறந்து பார்த்தேன் காலை  7மணி தூக்கி போட்டது ஒடிச்சென்று கண்ணாடியை பார்த்தேன் நான்நானாக தெரிந்தேன் .. என் கனவில் வந்த கனவு தேவதை…