நவாஸின் சிறுகதை
6 சிறுகதையாக நிகழ்ந்ததை எழுதியிருக்கிறேன்.!
- செல்வதுரை
- தாரம்
- பேருந்து உதவி
- பாசம் குறைந்திடுமா.!
- வேகம் வேண்டாம்
- ஸ்கூட்டி ஆசை
- செல்வதுரை
அம்பத்தூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசல் தேடி ரோட்டு கடையோரம் நின்றஒருவரிடம் விசாரித்தேன். அவர் “இங்க இருந்து இரண்டு தெரு தாண்டி போகனும் தம்பி என்றார். நான் மஸ்ஜித் (பள்ளிவாசல்) நோக்கி சென்றேன். அவர் பின்னாடியே என்னிடம் வந்து, வா தம்பி 2கீ.மீதூரம் நேரம் ஆகும். நான் அந்த வழியாக தான் போற சைக்கிள்ல ஏறுங்க என்றார்..
சிரமம் வேண்டாங்க நான் போய்கிறேன். நீ ஏறுங்க தம்பி. நானும் சைக்கிள் உட்கார்ந்தேன். சைக்கிளை மிதித்துக்கொண்டே தம்பி அம்பத்தூர் கம்பேனி வேலை செய்கிறீர்களா என்றார். இல்லங்க நான் இங்க Auditing காக வந்த உங்களுக்கு எந்த ஊருங்க ஐயா ‘மதுரை தம்பி ‘..
இந்த வெயில்லையும் செருப்பு போடாம என்னை வைத்து சைக்கிள் மிதிக்கிறீங்க எனக்கு கஷ்டமாகஇருக்கு என்றேன்.!
தம்பி, நான் ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு இருக்க.. உங்க தொழுகைக்கு நேரமாகும், எதிரேஇருக்க பள்ளிவாசல் தான் போங்க வேகமாக என்றார். நானும் நன்றி சொல்லிட்டு உங்க பெயர்என்னாங்கையா என்றேன் செல்வதுரை என்றார்..
2.தாரம்
அந்த கோடிக்கணக்கான turnover பண்ற முதலாளி எனக்கு நல்ல பழக்கம்.. அவருடன் ஒருநாள் காரில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கொஞ்சம் கடுகடுப்பாளர்! வேலை ஆகவில்லை என்றால் கடும் கோபம் வரும் அன்று காரில் பயணிக்கும்போது என்னிடம் “உனக்கு எப்ப கல்யாணம் என்றார். இல்ல சார் கொஞ்ச நாள் போகட்டும் என்றேன்!
எனக்கு கல்யாணம் ஆகி 25வருடம் ஆகிறது, இரண்டு வருடம் முன் தான் மனைவி காலமாய்டாங்க; (அவர் பையன் கல்லூரி படிக்கிறார் எனக்கு தெரியும்) என் பையனுக்கு சின்ன வயசு ஒரு தகப்பனாஎன் பேச்சு எற்பான தெரியல்ல என்ன இருந்தாலும் அம்மா என்ற அன்பு ஆளுமை வேண்டும்.
கவலைபடாதிங்க! கண்டிப்பா பையன் நல்ல வருவான் என்றேன், காரில் இருந்து எதையோதேடியவர் ஒரு சுட்கேஸ் இருந்து புகைப்படத்தை எடுத்தார். இது தான் என் மனைவி ரொம்ப நாள்கழித்து இன்று என் கண்ணில் பட்டது,. அவள் நினைப்பு வந்துவிட்டது, கண்ணீருடன் கார்கண்ணாடி வழியாக வெளியே பார்த்தார்.
பேசுவதற்கு என்னிடம் வார்த்தையில்லை வயதுமில்லை தாய்மை மனைவியின் ஆளுமை விட்டுசென்றபிறகே அறியமுடிகிறது அந்த கண்ணீருக்கு எந்த பணத்தாலும் பதில் சொல்லமுடியாது.!
3.பேருந்து உதவி
அலுவல் வேலை முடித்து வர இரவு 12மணி சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்துவருகின்ற போது எதிரே ஓர் 55 வயதுடைய பெண்மணி சிவந்த கண்கள் பதற்றமான நிலையில் அங்கும் இங்குமாய் அலைந்தவண்ணம் என்னை நோக்கி வந்தார்…
தம்பி, நில்லுங்க வேலூர் போகனும் எந்த பஸ், எங்க போகனும் எனக்கு தெரியல ரொம்ப நேரமாநிக்கிற… சொல்லுங்க! இங்க யார் கேட்டாலும் அங்க கேளுங்க இங்க போங்கனு சொல்றாங்க… ராத்திரி நேரம் கண்ணு சரியா தெரியல.. உதவுங்க
ரோட்டை கடந்து அந்த அம்மாவுடன் பஸ் வரும்வரை காத்திருந்தேன்.. இங்க எவ்வளவு நேரமாநிக்கிறிங்க மா.. 9;மணிக்கு வந்த.. யாருமே உதவுல எல்லாரும் அவங்க அவங்க அவசரத்துக்குபோறாங்க தனியாக இருக்கவும் பயம் தம்பி என்ன எத்தி விட்டுட்டு போகங்க..
இரவு வேலூர் க்கு நேர் பஸ் கிடைக்கவில்லை.. நேரம் கழித்து 1.15 க்கு வண்டி வந்தது.. அம்மாவைஎற்றிவிட்டேன்… நல்லபடியா ஊர் போய் சேர்ந்து இருப்பாங்க நம்புறேன்.!
4.பாசம் குறைந்திடுமா.!
அன்று நான் அலுவலகம் செல்ல பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன், என்அருகில் இரு வயதானவர்கள் நின்றுக்கொண்டு இருந்தார்கள்..
ஜயா, உட்காருங்க ரொம்ப நேரமா நிக்கிறிங்க ஏங்க போகனும்.. இல்ல தம்பி பராவாயில்ல, சொல்லி பக்கத்தில் இருந்த அவரின் மனைவியின் கையை பிடித்து ஒருவரையொருவர்பார்த்துக்கொண்டனர்..
வயது சுமார் 65 மேல் இருக்கும் என் அருகில் அமர்ந்தனர் என்னை பார்த்து நீ என் பேரன் அஸ்வின்போல இருக்க..
‘சிறிய புன்னகையுடன்”மம் எங்க போறிங்க தாத்தா.. கேட்டதுமே இருவரும் கண்கலங்கின, ஏன்ஏன்னாச்சி, இல்ல பா! எனக்கு ஒரு பையன் கல்யாணம் பண்ணி மெட்ராஸ் ல தான் வேலைபார்க்கிறார்.. எங்களை பார்க்க வரது இல்ல. வேலை இருக்கு அது இது சொல்லி நாங்க பார்த்து3வருசம் ஆகுது.. காலை ஊருல இருந்து மகன் மருமகள் பேரன பார்க்க வந்தோம்..
ஏதோ விருந்தாளி போல எங்களை கவனிச்சிட்டு கிளம்ப சொல்லிட்டு இரண்டு பேருமே வேலைக்குகிளம்பிட்டாங்க.. பேரனையும் ஸ்கூல் க்கு அனுப்பிச்சிட்டாங்க.. பையன் பணம் கொடுத்துமெட்ராஸ் சுத்திபார்த்துட்டு போக சொல்லி அனுப்பிட்டா..
என் பையன்தான் உலகமே இன்னைக்கு அவனே எங்கள விருந்தாளிக்கனாக்கா பார்த்து போய்டா.. பேரப்புள்ளையை பள்ளிக்கூடத்துல பார்த்துட்டு ஊருக்கு கிளம்பலாம் நிக்கிறோம்.. எங்களைஸ்கூல்’ல பார்க்க விடுவாங்கலானு தெரில.! அடையார் பஸ் ஏறனும்.. அவர்களை பேருந்தில் வழி அனுப்பினேன்..
படித்து என்ன பிரயோசனம் யாருக்காக வாழ்கிறோம் யாரால் வாழ்கிறோம் பதிலே தெரியாமல்பயணிக்கிறோம் அன்பு பாசம் மனிதநேயம் சில சிட்டி லைஃப் மறைந்து விடுகின்றனர்..
5.வேகம் வேண்டாம்
அவருக்கு 65 நிரம்பிய வயது சென்னை. OMR IT கம்பெனியில் காவலர் பணி.
அவரை முதல்முதலாக அன்று தான் டீ கடையில் சந்தித்தேன். ஒரு 15நிமிடம் பேசியிருப்பேன்.. நல்லவொரு மனிதர் கலகலபாக பேசிய அரசியல், வாழ்க்கை அனுபவங்கள்.. பேசி விடைபெற்றுரோட்டை கடந்த அடுத்த நொடி ஏங்க இருந்தோ வந்த பைக் அவர் மீது மோதியது உடல்முழுவதும்ரத்தம் வழிகிறது.. இரு வார்த்தை தான் தண்ணீர் தண்ணீர் என்னை பார்த்து கேட்டார்கொடுப்பதற்குள் இறந்துவிட்டார்..
எத்தனையோ விபத்து நம்மை கடக்கிறது.. சில நிமிடம் பேசிய எனக்கே அவர் உயிர் பிரிவதைதாங்க முடியவில்லை.. அவரின் குடும்ப நிலை எப்படி இருக்கும்.. உயிரை விட பைக் வேகம் வீரம்என்று நினைப்பவர்கள் தனியாக சாகசம் செய்யுங்கள்.. உங்கள் வேகத்தால் இன்னொரு அப்பாவிஇறப்பது என்ன நியாயம்..
6.ஸ்கூட்டி ஆசை
வேலைக்கு சென்னை தாம்பரம் டூ மயிலை ரயிலில் செல்வது வழக்கம் தினமும் மாலை வேலைமுடிந்தவுடன் ரயிலில் என்னுடன் பல பேர் சொம்பலும் அசதியுடன் பயணிப்பர் என் அருகில்38வயதுதக்க பெண்மணி என்னிடம் தம்பி என் செல் யூடியூப் (YouTube) யில் Scotty வீடியோ போட்டுதாங்க கேட்டார் நானும் வீடியோ எடுத்துகொடுத்தேன் என் மகள் எனக்கு save பண்ணி கொடுத்தால்அழிந்துவிட்டது தம்பி எனக்கு Scotty வாங்கனும் பலநாள் ஆசை 38000/- லாம் நல்ல Scotty இருக்குமேடம் என்றேன்..
இல்லை தம்பி ஆசை பட்டா எல்லாமே அடைந்துவிட முடியுமா என் சம்பளம் அவரு சம்பளமே வீட்டுசெலவுக்கே சரியாகிடும் பார்பதோட சரி ஒரு நாள் வாங்குவன் தம்பி என்றார்
சில ஆசைகள் சம்பாரித்தாலும் எளிதில் கிடைப்பதில்லை
அவங்க போனபிறகு எங்க வீட்டு பெண்மணிகளை நினைத்துபார்த்தேன்..
முஹம்மது நவாசுதீன்
Leave a Reply