அப்பா-வாக்கப்பட்டேன்
மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுள்ளார் ! கைப்பேசி ஒலி அடிக்குபோதெல்லாம் பதற்றமும் எதிர்பார்ப்பும்! எந்த செய்தி என்று என்ன செய்வது !
வெளிநாட்டில் இருந்துக்கொண்டு மனைவியின் வலியையும் பிள்ளையும் தேகமும் தொடமுடியாத வலி., நல்ல செய்தி வந்திடக்கூடாதா ! நெருங்கிய நட்புடன் மனைவி மருத்துவமனை அனுமதித்திருக்கிறார் என்றேன் ! பயம் கொள்ள வேண்டாம் என்றார்கள் ! இத்தனை நாள் சொல்வது எளியது நினைந்தேன் ! அந்த இடத்தில் இருந்து உணர்ந்தால் தான் தெரிகிறது., வலி யில்லாம பிறக்குமா என்று வீட்டு பெண்களிடம் கேட்டேன் சிரித்துக்கொண்டே உன் அம்மாவிடம் கேள் என்றார்கள் ! அம்மா புன்னகையுடன் நீ பிறக்கும் போது வலி இல்லை என்றார்கள் ! இருந்தும் பிரசவ வலியை பற்றி படித்திருக்கிறேன் ! உயிர் போகும் என்றார்கள் ! எழும்புகளை உடைப்பதுபோல் இருக்கும் என்றார்கள் ! நினைக்க நினைக்க என்ன செய்வது எப்படி தாங்கிக் கொள்வாள்., பெரிய தண்டனை கொடுத்துவிட்டேனே! ஊரடங்கு உத்தரவு ! சொந்தங்கள் ஒவ்வொரு பக்கம் ! கடைகள் அடைக்கப்பட்டுள்ளன !
வாகனங்கள்முடங்கியுள்ளது.! மகன்/மகளுக்கு பெரிய கதை இருக்கு ஆனால் தகப்பனாக என்ன செய்வது ! அத்தா நீ ஏன்இல்லை என்று கேட்டால் நாளை என்ன சொல்வது ! பிறப்பது ஆணா , பெண்ணா என்று சிந்திக்கதோன்றவில்லை ! அவள் வந்தால் போதும் நினைந்தேன் கடைசியாக தொலைப்பேசி அழைப்பில் குழந்தை பிறந்துள்ளது என்றார்கள் !
அப்பாவாக்கப்பட்டேன் – 13-04-2020