தனிமை
நம் மனநிலையில் வெளிப்பாடு தனிமை இது நம்மை தேவையில்லா சிந்தனை கொண்டு போகும், சோகங்கள் வலி நினைவிற்கு வரும்.. நமக்கு பிடித்தமானவர் நம்மை வெறுக்கும்போது நம்மை சார்ந்தவர்கள் நம்மை ஒதுக்கும்போது அதை உணர்வோம், 100 பேர் அமர்ந்திருக்கும் பொது இடத்தில் நம் சிந்தனையும் நாமும் எங்கோ சென்றுக்கொண்டு இருக்கும்..
நம் குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் தனிமை வாழ்வு அழுகை காயங்கள் ஒருபோதும் சொல்லமுடியாத வலி. பெற்றோர் பிள்ளைகளை பிரிந்து வாழும்.
ஆதரவற்றோர் தனிமை. பெண்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும்போது, விருப்பமானவற்றை நிறைவேற்றாதபோது இதை எழுத்துக்களில் உணரவைப்பது கடினம்.. கணவரை பிரிந்த மனைவின் தனிமை , வயது 60தை நெருங்கியிருக்கும் நம்
துணைவியார் நம்மை விட்டு சென்றுயிருப்பார் நம் சந்ததினர் நம்மை ஒர் மூலையில் இடம் கொடுத்திர்பார்கள் நம்முடைய பசி தூக்கம் உடல் வலி வேதனை கேட்க நாதியில்லாமல் இருப்போம்.. தனிமையை கண்ணீரில் உணர்வோம்..
தனிமைக்கு பாலினமில்லை இது அனைவரின் உள்மனதில் படிந்திருக்கும் சிந்தனை அதை உணரும்போது உன் ஆழ்மனதில் குரல் மட்டுமே ஒலிக்கும் நாம் எதையெல்லாம் தனிமையில் ரசிக்கின்றோமோ உன்னிடம் பேச முயற்சிக்கும் கடற்கரை அலைகள், தனி அறையின் சுவரும், பேருந்தில் ஜன்னல் வழியாக பேசும் .. எப்போதும் ஒருவனால் தனது மனதை ஒரே மாதிரியான கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாது தனிமை அவனை சூழ்ந்துக்கொள்ளும் சங்கிலியில் கட்டப்பட்ட மனிதன்போல்
நம் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வோம், நம்மை தனிமையிடமிருந்து வெளிக்கொண்டு வர முயற்சிப்போம்.. வாழ்வில் இதை நாம் கண்டிபாக சுவைப்போம் அதை நாம் விஷமாக மாற்றிடாமல் நல்ல நினைவுகளாக வரைவோம் தனிமையின் வலி யாருக்கும் வேண்டாம் அனைவரிடமும் சகஜமாக பேசுவோம்..,
நன்றி
எழுத்து நவாசுதீன்
Leave a Reply