குப்பை

சராசரி மனிதர்கள் மூலம் கொட்டப்படும் குப்பை கழிவுகள் அதை கொட்டும்போது நாம் சிந்தித்ததுண்டா ! அள்ளுபவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான் என்று ?

நான் உணவகத்தில் மேலாளராக பணியாற்றியபோது பொறுப்புகள் என் கீழ் கொடுக்கப்பட்டது ஒருநாள் கழிவறை அடைப்பு எற்பட்டது நானும் அடைப்பு எடுப்பவரை வரவழைத்து அதனை சரிசெய்த. நான் நேரில் பார்த்த அவலம் கழிவுகளை கைகளால் எடுத்தார்கள் . ஏன் சாதனங்கள் எதுவுமில்லையா என்றேன் அதெல்லாம் இல்லை என்ற பதில் வந்தது.. எனக்கு கொடுக்கப்பட்ட 600 ரூபாயில் வேலையை முடிக்கவேண்டும், ஆனால் அவர் கேட்ட 1000 ரூபாயை என்னால் வாங்கி கொடுக்கமுடியவில்லை என்பது எனக்கு மிகவும் வேதனையளித்தது. அவர் உழைப்பிற்கு சரியான ஊதியம் கிடைக்கவில்லையே

உண்மையில் அந்த செயலை யாராலும் செய்ய முடியாது துப்புரவுதொழிலாளர்கள் மீது என் பார்வையை செலுத்த தொடங்கினேன் அவர்கள் நடவடிக்கைகளை கவனித்தேன்.. வேதனை மிகுந்த தொழில். நான் வேலைக்கு செல்லும் வழியில் குப்பை அள்ளும் ஒருவரை தினமும் பார்ப்பேன் அவரும் என்னை பார்த்து சிறிது புன்னகைப்பார், அவருடன் பேச முற்பட்டேன் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது கடையில் பொருள் வாங்குபோது, அந்த சந்திப்பின் போது அவரிடம் பேச்சுக்கொடுத்தேன் அவரையும் அவரது தொழிலையும் பற்றி சொன்னார் மிகவும் ஆபத்தான ஒன்று!!

நம்ம மக்கள் எங்க சார் எங்களை சமநிலையோடு பார்க்கிறார்கள் !? குப்பையோட குப்பையாகதான் பார்க்கிறார்கள் உங்களை மாதிரி தானே நாங்களும் கைகளால் சாப்பிடுகிறோம் உங்க மலத்தை நீங்க தொடுவிங்களா சார்! எப்படி சார் நாங்க பணத்துக்காக தொடுவோம் என்று நினைக்கிறார்கள்.. ரோட்டில் நாய் எலி இறந்துகிடக்கும் நீங்க மூக்கை மூடிகிட்டு போயிடுவிங்க நாங்கதான் எடுக்கனும்!. அரசாங்கம் மேல குறை இருக்கு அதற்காக குறை சொல்லவேண்டாம் நம்ம மக்களும் சரியா நடந்துக்கனும்.

இங்க எத்தனை பேர் குப்பை கழிவுகளை குப்பை தொட்டில் போடுறாங்க பொதுஇடத்தில் எச்சில் துப்பாதீர்கள் சிறுநீர் கழிக்காதே! இந்த வாக்கியத்தை நம்ம கடைபிடிச்சிருக்கோமா இன்னும் காலனி அணியாமல் எத்தனையோ மக்கள் நடந்துபோகிறார்கள். இதை சொல்கிறதை விட நாம் உணரனும்..

என் பொண்ணுக்கு 10வயசு நான் வேலை முடிச்சிட்டு வந்தா என்னை பார்க்க ஆசையா ஓடிவருவாள் என்னால் நெருங்க முடியாது எங்க என் சாக்கடை நாற்றம் , ஏதாவது நோய் வந்துடுமோனு பயம் சார் மனைவி பார்க்கிற பார்வை சொல்ல முடியாத வலி..

இப்ப கூட இந்த தொழில் விட்டுட்டு வேற தொழில் செய்யுங்கள் நீங்கள் என்று நினைப்பவர்களும் சொல்பவர்களும் ஏராளம் உங்களை மாதிரி மூக்கை பொத்திகிட்டு போக மனசு வரவில்லை சார்

சுகாதாரம் சுத்தம் நம்மில் இருந்து தொடங்கப்படும் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மாற்றத்தை நம்மிடமிருந்து தொடருவோம்

நன்றி 

நவாசுதீன்