கடைசி கண்ணீர்
நிசப்பதமும் அழுகையும் என்னை சூழ்ந்துக்கொண்டது அனைவரின் கவனமும் என் மீது , வந்தவர்களை என்னால் அழைக்க முடியவில்லை அவர்களிடம் பேசமுடியவில்லை. நான் என் அண்டை வீட்டாரிடம் பகைத்துக்கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் அவருடன் உறவாடவில்லை ஆனால் அவரும் என்னை கவலைதோய்தமுகத்துடன் எனக்கு அண்மையில் நின்று என்னை கவனித்துக்கொண்டு இருக்கிறார்.
இருபது ஆண்டுகளுக்கு மேல் எந்த தொடர்புகளும் இல்லாமல் இருந்த என் நண்பன் அவன் என் அருகில் நின்று பார்வையால் என்னிடம் பேச முயல்கிறான். அவன் முகம் நோக்கும்பொழுது பள்ளி பருவம் பசுமை நினைவுகள் என்னுள் கடந்துசெல்கிறது. இனி பழைய நாட்கள் திரும்பபோவது இல்லை .
எத்தனை நாட்கள் நண்பனின் குடும்பத்துடன் உணவு உண்ட அனுபவம்., மனதில் இன்றும் சுவைகின்றது காலம்கடந்துவிட்டது படுக்கைக்கையும் என்னை அழைத்துக்கொண்டது.,
தொலைதூர உறவுகள் அடுத்த ஊரில் இருந்த இரத்தபந்தங்கள் தாய் வழி மற்றும் தந்தை வழி சொந்தங்கள் என்னை சுற்றி ஒருவித ஏக்கங்களும் என்னை பார்கிறார்கள். நான் எந்த நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்ளவில்லை சொந்தங்களிடம் நெருங்கி பழகுவது இல்லை. இன்று நான் படுக்கையில் இருக்கிறேன் என் உடம்பில் ஒர் அசைவுமில்லை கண்களால் மட்டுமே என் வார்த்தையும் வந்தவர்களை கடத்துகிறேன். என் பார்வையின் இறுதியில் நான் இரண்டு இலட்சம் கடன் வாங்கி இருந்த கடன்காரர் அவரிடம் வாங்கிய பணத்தை எப்படி தராமல் போய்விடுவனோ என்ற பயம்., பயம் என்றவுடன் என் கண்கள் என் மனைவியையும் மகளையும் தேடுகிறது அவர்களோ என் தலை பகுதியில் அமர்ந்திருக்கிறார்.,
மகள் மிக பிரியமாய் வளர்ந்தவள் அவள் ஆசைகளை நிறைவேற்றிவிட்டேனா? தகப்பனாக என் கடமைகளை முடித்துவிட்டேனா? என்று எனக்கு தெரியவில்லை அன்புமகள் அழுகையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அழதே என்று கூறவும் முடியவில்லை., என் மனைவி எனக்காக குடும்பம் சொந்தங்களை விட்டு வந்தவள் இன்று நான் அவளுக்கு முன்னால் செல்கிறேன் பாசம் அன்பு அறவணைப்பு காதல் சண்டையை கற்றுத்தந்தவள் நான் இன்று அவளிடமிருந்து பிரிந்துசெல்கிறேன், இனி யார் என் மனைவியை மகளை கவனித்துக்கொள்வார்கள் என்று நினைந்தால் உயிர்பிரியும் வலியை அது மிகைக்கிறது
என் கடந்த காலங்களில் என் தாய் தந்தையுடன் சேர்ந்து வாழ்ந்த வீடு இனி இது எனக்கு சொந்தமில்லை.. அற்ப்பலபத்திற்க்காக வியாபார சந்தர்பங்களில் பலமுறை பொய் சொல்லிருக்கிறேன் ஏமாற்றிருக்கிறேன் என்னை காதலித்த பெண்ணிடமும் உண்மையாக இல்லை அவளையும் இழந்துவிட்டேன், நண்பர்களிடம் சட்டையிட்டுகிருக்கிறேன். நட்பு பாரட்டியது இல்லை
இல்லாத எழை குழந்தைகளுக்கு நான் எதுவுமே செய்தது இல்லை நான் வாழ்ந்த நாட்களை வீண் அடித்துவிட்டேன்
பணம் பணம் என்று ஓடியே பாதி வாழ்க்கையின் இன்பத்தை தொலைத்துவிட்டேன். சொந்தபந்தங்களை தவர விட்டுவிட்டேன் இனி நான் நினைந்தாலும் இழந்த வாழ்க்கையை திரும்பப்பெறப்போவதில்லை.
எனக்கு தெரிகிறது என் உயிர் இன்றுபிரிந்துவிடும் என்று.., நான் என் மனைவிடம் மகளிடம் பேச முயற்சிக்கிறேன் என் வாயில் பால் ஊற்றுகிறார்கள்.,
மனித வாழ்க்கை அவ்வளவு எளிதல்ல நான் இறந்தபிறகு எங்கு செல்வேன் என்று தெரியவில்லை ஆனால் உலகில் கழித்த நாட்களை தவறவிட்டுவிட்டேன்.,
என் கண்கள் வழிபிதுங்கி மொத்த இரத்தஓட்டமும் நின்றுவிட்ட இறுதி கண்ணீருடம் கண்களை மூடுகிறேன்
என் உடலை முதல்முறை எதிரில் நின்று நான் பார்க்கிறேன், அழுகை சத்தம்கேட்கிறது என் முகத்தை மூடுகிறார்கள் நான் உங்கிளிடமிருந்து விடைப்பெறுகிறேன் கடைசிகண்ணீருடன்…….
Leave a Reply