என் காதல் திருமணம்
திருமண வயது நெருங்கிவிட்டது.. வீட்டில் அனைவரும் பெண் பார்க்க முடிவு செய்தார்கள் என்ன செய்வது அம்மா கேட்டதுமே என்னால் தலையை மட்டுமே அசைக்க முடிந்தது “அமைதி சம்மதம் என்று எடுத்துக்கொண்டனர். பெண்கள் மட்டுமல்ல சில ஆண் களாலும் வீட்டை எதிர்த்து பேசமுடியாத சூழல்..
இது பயமில்லை சிறு வயதில் இருந்து நம்மை வளர்த்த பாசம் அன்பு, நான் காயப்பட்டாலும் பெற்றவர்கள் காயப்படக்கூடாது நோக்கம்.. பலநாட்கள் காதல் தோல்வியற்றதை நினைத்து அழுது இருக்கிறேன்.. ஆண்களின் கண்ணீர் உண்மையானது வெளியில் காட்டிக்கொள்ளாமல் பலநாள் தனிமையில் இருந்த வலி.. நான் அவளிடம் தோற்றாலும் என்றுமே காதலில் தோற்றதில்லை..
மறக்கமுடியாத நினைவுகள் நினைத்து என்றுமே கண்ணீர் மூலமே வெளிக்கொண்டு காலத்தை நகர்த்துகிறேன் என்ன செய்வது ! வருபவளிடம் எப்படி நடந்துக்கொள்ளவது ? நினைவுகளை எப்படி மறப்பது ? தனி மனிதனாக பல கேள்விகள் வருபவளிடம் சொல்லிவிடலாமா அது அவளை காயப்படுத்திவிட்டாள் என் சோகம் என்னோடு போகட்டும் ஆனால் எத்தனை நாள் மறைப்பது நானும் நினைவுகளை அழிக்க 3 வருடங்கள் எடுத்துக்கொண்டேன் இருந்தும் அழிக்கமுடியவில்லை..
திருமண நாள் நெருங்கியது வீட்டில் அனைவரும் சந்தோஷத்தில். என் கண்கள் காட்டிக்கொடுத்து விடுமோ என்ற பயம்..
நான் அவளிடம் உன்னை விட யாரையும் நேசிக்கமாட்டேன் என்று பலமுறை கூறியிருக்கிறேன் .. வருபவள் பல கனவுகளோடு வருவாள் இப்போது யாரை எமாற்றுகிறேன் ?? பல ஆண்களின் நிலைமை வாழ்க்கையின் போராட்டத்தில் இதுவும் ஓன்று.. காதலியை போல மனைவியை நேசியுங்கள் என் காதல் / திருமணம்
எழுத்து நவாசுதீன்
Leave a Reply