அம்மாவின் கடிதம்
அந்த மாலை நேரம் மனதில் நிம்மதியில்லாமல் வீட்டில் குட்டி போட்ட பூனையாக சுற்றிவலம் வந்தேன் சரி நேரம் போக பழைய பெட்டியை சுத்தம் செய்ய அந்த கடிதம் கண்ணீல் தென்பட்டது அம்மாவின் கடிதம், அம்மா எனக்காக எழுதிய கடிதம்
அம்மா வை பிரிந்து 3 வருடங்களாகிறது அம்மா பக்கத்தில் இருந்தபோது பசியில்லாமல் கவலையில்லாமல் வாழ்க்கை சென்றது,. எனக்காக பார்த்துப் பார்த்து சமைத்து தருவார் வெளியில் சென்று வீட்டுக்கு திரும்பும்போது அம்மா என்று அழைப்பேன் அம்மா இல்லாத சமயம் அம்மா ஏங்கே என்று கேட்பேன் இன்று முற்றிலுமாக பிரிந்துவிடுவார் என்று நம்ப முடியவில்லை…,
கடிதத்தை இத்தனை வருடங்கள் படிக்கவில்லை பிரித்ததும் அன்பு மகனே வார்த்தை என்னை கொன்றுவிட்டது ! ஆரோக்கியத்துடன் நலமாக இருக்க என்றும் அம்மா இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் மாதம் அனுப்பிய பணம் கிடைக்கப்பெற்றேன்., பேத்தி மருமகள் எப்படி இருங்காங்க’! இந்த தடவையாவது ஊருக்கு வா தம்பி ! உன்னையும் பேத்தியும் பார்க்க கண் தேடுகிறது.. (என் கண்ணீர் கடித்ததின் எழுத்துக்களை அழிக்க தொடங்கியது அம்மா வை நான் என் பார்க்கவில்லை கடைசி நிமிடத்திலாவது அம்மாவுடன் இருந்திருக்கலாம்.. )
உனக்கு பிடித்த நெல்லிக்காய் கொய்யாவும் வீட்டு மரத்தில் பறிக்க ஆளிளாமல் வீணாகிறது.. பள்ளியில் படித்த உன் நண்பன் ரசூல் தான் எனக்கு காய்கறி வாங்கிகொடுப்பதும் மருந்து வாங்கி கொடுக்கிறான் .,. தனியாக இருந்து பழக்கப்படுத்திக்கொள்கிறேன் ஆனால் இந்த வயதான உடல் ஏற்றுக்கொள்ளமறுகிறது.,. சின்ன வயதில் உன்னை தூக்கிய உடம்பு இன்று பலமிலந்து போய்விட்டது . வீட்டில் வேலைசெய்ய அனுப்பிய வள்ளியும் சரியாக வரவில்லை.., வீட்டில் நீ வைத்த மல்லிகை செடியில் பூ பூக்க தொடங்கியுள்ளது., பறிக்க யாருமில்லை.,
தைரியமாக இருந்துக்கொள் யாரையும் அனுசரித்து நடந்துக்கொள். அம்மா இல்லை என்று எந்த விதத்திலும் கவலைக்கொள்ளாதே மனைவியும் மகளையும் பார்ததுக்கொள்., எந்த துணையும் நிரந்தரமில்லை ராஜா! அம்மாவுக்கு அப்பா யில்லாத கவலையை நீதான் போக்கினாய் இன்று பெற்ற மகனையும் விட்டு பிரிந்து இருப்பது நெருப்பில் இருப்பதுபோல் உள்ளது.,உங்களை எல்லாம் பார்க்கனும் பேத்தியுடன் விளையாட ஆசையாகவுள்ளது., உங்க அப்பா மகன் தான் பிறப்பார் என்று என்னிடம் கூறியபோது.. நீ வந்து ராஜாவாக பிறந்தாய் உங்க அப்பா என்னை விட்டு பிரிந்தபோதும் அதைதான் நினைவு கூறினார்., என் மகன் உன்னை பார்ததுக்கொள்வான் என்று நீயும் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறாய்.. தாயோட ஆசை சந்தோஷம் எல்லாம் நீ தான் ராஜா !
என்னோட கடிதம் உனக்கு கிடைக்கும்போது என்னை பார்க்க வா பா ! உன்னை பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்துடன்.. அன்புள்ள அம்மா
கோவமும் ஆத்திரமும் என்மீது அதிகமானது அம்மா வை நான் தவறவிட்டேன் கண்கள் குளமாயின அம்மா அம்மா என்று மனதில் தொடங்கிய அந்த வார்த்தை நெஞ்சில் இறுக்கத்தை அதிகமாக்கின, யாருக்காக ஓடினேன் என்று தெரியாமல் இந்த வாழ்க்கை எனக்கு கொடுத்தவர்களை தவறவிட்டுவிட்டேன் ! அம்மா மன்னித்துவிடு…
பிரிந்த மகன்களுக்கு சமர்ப்பணம் – நவாசுதீன்
Leave a Reply