அந்த 40 ரூபாய்
அந்த 40 ரூபாய்க்கு பதில் கிடைக்க 5 வருடம் எடுத்துக்கொண்டேன், ஆம் பள்ளி முடித்துகல்லூரி வயது! அந்தகடை முதலாளி எனக்கு பல வருடங்களாக பழக்கம்.. உழைப்பால்உயர்ந்தவர் பல நாட்கள் அவர் கடையில் நானும் உதவிக்காக பொருட்களை எடுத்துவைப்பதும் வரும் வாடிக்கையாளர்களை கவனிப்பேன்.
அப்படி ஒருநாள் கடையில் நிற்கும்போது பொருள் விற்றபணம் 40 ரூபாயைமறந்து வைத்துவிட்டார்..
வைத்த இடம் மறந்து 30நிமிடமாவது தேடியிருப்போம் கிடைக்கவில்லை..
என் மனதோ அவர் ஏன் 40 ரூபாய்க்கு இப்படி தேடுகிறார், அவர் நான் எது கேட்டாலும்தயக்கமே இல்லாமல் பணம் கொடுப்பார், யாருக்கும் உதவி என்றால் தயக்கமின்றி பணஉதவிச்செய்வார் அப்படி உள்ளவர் முகம் இன்று மாறிவிட்டது, நீண்ட நேரம் எதோ அவர்மனதில் அதையே நினைக்க,
நான் வைத்து இருக்கும் பணத்தை கொடுத்தாவது அவர் மனதை சந்தோஷப்படும் என்றுஎண்ணினேன். என்ன வாப்பா. ரொம்ப இதை நினைக்காதீங்க சொன்னதும். ‘இல்லை அதுஉழைத்தகாசு தம்பி நாம கொடுத்த காசு எற்றுக்கொள்ளலாம் நமக்கு இறைவனாகஉழைத்ததிற்கு கொடுத்ததை தவறவிட்டுவிட்டேன்., சரி என்று விட்டுவிட்டேன்., அன்றுதெரியாத உழைப்பு இன்று நான் வேலையில் சம்பாதிக்கும் போது அந்த 40 ரூபாயின்மதிப்பு தெரிகிறது., பணத்திலில்லை உழைக்கும் வியர்வையி்ல் உள்ளது.!
அந்த 40ரூபாய் எனக்கு உழைப்பை உணர்த்தியது, 40ரூபாய் தானே உங்களுக்கும்தோன்றினால் எனக்கு கிடைத்த விடை உங்களுக்கு கிடைக்கும்போது நீங்கள்உழைத்துக்கொண்டு இருப்பீர்
நன்றி
நவாசுதீன் பாடம்
Leave a Reply