மகாராணி

ஏங்கே செல்வது தெரியவில்லை ! இரவு 1 மணி இந்த கைகுழந்தை இரவோடு இரவாக அனாதை அசிரமத்தில் வச்சிட்டு வந்திடலாம்.. நான்தான் பெண்ணாக பிறந்து எல்லாருக்கும் கஷ்டம்.. நீயும் ஏன் மா ! என் மகளா பிறந்த.. நம்மல இங்க வாழ விடமாட்டாங்க.. உன்னை எங்கயாவது விட்டு விட்டு என் வாழ்க்கையை முடிச்சிகலாம் இருக்க… 

எனக்கு பிடிச்ச வாழ்க்கை வாழனும் தான் ஆசை என்ன பண்றது பெண்ணா பிறந்து விட்டேன்… பிறந்த வீட்டை விட்டு புகூர்ந்த விட்டுக்கு எல்லாரும் மாதிரி நல்ல எதிர்பார்ப்புடன் வாழ்க்கை அமைக்க போனேன்.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளை. காதல் எனக்கு இஷ்டம் இல்லை.. நல்ல பையன் எனக்கு  பிடிச்சி இருந்தது.. நானும் b.sc வரை படிச்சவதான்.. எல்லாரையும் என் குடும்பமா பார்த்துகனும் ஆசையோட போனேன்… என் கணவர் ஓர் பெண்ணை காதலிச்சிருக்காரு அது தோல்வி முடிச்சதும் சில சமயம் குடிப்பாரு… நானும் போக போக சரிப்பண்ணிடலாம் நினைத்தேன்.. அவருக்கு பிடித்த மாதிரி நடந்துகிட்டேன்.. என்னை மனசார எற்றுக்கொள்ளவில்லை.. ஆறு மாதத்தில் நான் கருவுற்றேன்.. அதில் இருந்து என் மாமியார்க்கு ஆண் குழந்தை பிறக்கனும் என்ன பார்த்து பார்த்து கவனிச்சிகிட்டாங்க.. ஆண் குழந்தை தான் குடும்பத்தோட வாரிசு நீ ஆண் குழந்தை தான் பெற்றுக்கொடுக்கனும் ஒரு ஒரு முறை சொல்லும்போது  பல நாட்கள் தூங்காத இரவாக விழித்திருக்கிறேன்.. 

ஏழாம் மாதம் சடங்கு செய்யனும் என் மாமனார் சீர் வரிசையாக மாப்பிள்ளைக்கு கார் கேட்டார்.. என் அப்பா அதை வாங்கி கொடுக்கமுடியாத சூழல்.. அதில் இருந்து மாமனாருக்கு என்னையும் என் குடும்பத்தையும் கண்டா பிடிக்கிறது இல்லை.. கஷ்டம் வந்தாலும் பிள்ளைய நல்லபடியா பெற்றுக்கொடுக்கனும்..

ஒன்பதாம் மாதம் அம்மா வீட்லதான் இருந்த வறுமையிருந்தாலும் நல்லா கவனிச்சிகிட்டாங்க.. அப்பா க்கு ஹாட் ஆபரேஷன் செய்யனும்.. எனக்கு கடுமையான வயிற்றுவலி மருத்துவமனையில் அனுமதித்தாங்க.. குழந்தை ஆபரேஷன் செய்துதான் எடுக்கனும் செலவாகும் என்றதும்.. முதல் குழந்தை தாய் வீட்டில் தான் செலவு செய்யனும் சொல்லிட்டாங்க.. எங்க அம்மா , அப்பா ஆபரேஷன் க்கு வைத்து இருந்த பணம் நகை வைத்து ஆபரேஷனில் பெண்குழந்தை பிறந்தது.. 

என் மாமியார் என்னை எற்றுக்கொள்ளவில்லை என் கணவரும் அம்மா பேச்ச கேட்டு என்ன எங்கையாவது தொலைந்து போ.. சொல்லிட்டாங்க அவங்க வீட்டுக்குப் போய்டாங்க.. என் வீட்டுக்கு போக மனமில்லை என்ன பண்றது தெரியவில்லை.. குழந்தை எடுத்துட்டு வந்துட்ட…


இப்படிக்கு மகாராணி